இரட்டை இலையின் பின்புலத்தில் பாஜகதான் உள்ளது...! உளறிய எம்.எல்.ஏ... ’ஷாக்’கான அதிமுக...!

First Published Nov 24, 2017, 4:32 PM IST
Highlights
The MLA called the BJPs background in the twin leaf symbol ruling. Said the private.


இரட்டை இலை சின்னம் குறித்த தீர்ப்பில் பாஜக-வின் பின்புலம் உள்ளது என எம்.எல்.ஏ. தனியரசு தெரிவித்துள்ளார். 

அதிமுகவின் கூட்டணி கட்சிகளான இளைஞர் பேரவையின் தனியரசு , முக்குலத்தோர் புலிப்படையின் கருணாஸ், மனித நேய மக்கள் கட்சியின் தமிமுன் அன்சாரி ஆகியோர் ஜெயலலிதா இருந்த போது அதிமுக சின்னமான இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளராக நின்று வெற்றி  பெற்றனர். 

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக சசிகலாவின் கீழ் வந்தது. ஆனால் அது நீண்ட நாட்களுக்கு நிலைக்கவில்லை. சொத்துகுவிப்பு வழக்கில் தீர்ப்பு வரவே சசிகலா சிறைக்கு சென்றார். 

இதனால் அதிமுக அடுத்து டிடிவியின் வசம் சென்றது. ஆனால் எடப்பாடிக்கு போட்டியாக டிடிவி செயல்பட்டதால் எடப்பாடி ராஜ தந்திரமாக செயல்பட்டு அதிமுகவை தற்போது தன் பக்கம் அதிகாரபூர்வமாக இழுத்து போட்டு விட்டார். 

அதிமுகவில் எவ்வளவு உச்சகட்ட குழப்பங்கள் நிகழ்ந்தாலும் கூட்டணி கட்சிகளான கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் ஒற்றுமையாகவே செயல்பட்டு வருகின்றனர். 

இதனிடையே எடப்பாடி தலைமயிலான அமைச்சரவை பாஜகவுக்கு துணைபோவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகின்றது. இதனால் தமிமுன் அன்சாரி சற்று கலக்கத்திலேயே உள்ளார். 

இதைதொடர்ந்து கருணாஸ் முழுக்க முழுக்க சசிகலாவுக்கு டிடிவி தினகரனுக்கும் தான் சப்போர்ட் செய்து வருகின்றார். மூன்றாவதாக உள்ள தனியரசு தற்போது ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். அவரும் எடப்பாடிக்கு எதிராகவே பொடி தூவியுள்ளார். 

அதாவது, இரட்டை இலை சின்னம் குறித்த தீர்ப்பில் பாஜக-வின் பின்புலம் உள்ளது என தெரிவித்துள்ளார். 

இரட்டை இலையை கொடுத்துவிட்டு, அடுத்த நாளே ஆர்.கே.நகர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் ஆர்.கே.நகர் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது பற்றி தோழமை கட்சிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

இதனால் அதிமுகவின் கூட்டணி எம்.எல்.ஏக்களான இவர்களே முன்னுக்கு முரணாக பேசி வருகிறார்களே என்ற கலக்கத்தில் அதிமுகவினர் முனவி வருகிறார்களாம். 

click me!