நாளை பட்ஜெட் -பொருளாதார ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள்

Asianet News Tamil  
Published : Jan 31, 2017, 07:36 PM ISTUpdated : Sep 19, 2018, 03:02 AM IST
நாளை பட்ஜெட் -பொருளாதார ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள்

சுருக்கம்

2016-17ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அதில் நாட்டின்  பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 6.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 2017-18ம் நிதியாண்டில் இது 6.75 சதவீதம் முதல் 7.5 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

1. தனிநபர் வருமான வரி விகிதத்தையும், ரியல் எஸ்டேட் தொழிலில் முத்திரைத்தாள் கட்டணத்தை குறைக்க வேண்டும்.

2. உயர்ந்த வருமானம் ஈட்டும் அனைத்து பிரிவினரும் வருமானவரி வளையத்துக்குள் படிப்படியாக கொண்டு வரப்பட வேண்டும்.

3. கார்ப்பரேட் வரியை குறைக்க திட்டங்கள் வகுக்க வேண்டும்.

4. வரி வசூல் நிர்வாகத்தில் நம்பகத்தன்மை மற்றும் குற்றங்களைக் குறைத்து மேம்படுத்தப்பட வேண்டும்.

5. புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு முழுமையாக வந்த உடன் வளர்ச்சி இயல்புநிலைக்கு திரும்பும்.

6. ரூபாய் நோட்டு தடையால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீகிதம் 0.25 சதவீதம் முதல் 0-.50 சதவீதம் பாதிக்கப்படும். ஆனால், நீண்ட காலத்தில் பலன் ஏற்படும்.

7. சரக்கு மற்றும் சேவை வரி(ஜி.எஸ்.டி.) உள்ளிட்ட மறைமுகவரி சீர்திருத்தங்களால் எதிர்காலத்தில் வளர்ச்சி விகிதம் 8 முதல் 10ச தவீதம் உயரும்.

8. கச்சா எண்ணெய் விலை குறைவு, பிரதம மந்திரி கரீப் கல்யான் யோஜனா திட்டத்தால் நிதிச்சூழல் மேம்படும்.

9. நடப்பு நிதியாண்டில் வேளாண் வளர்ச்சி 4.1சதவீதமாக இருக்கும். கடந்த நிதியாண்டில் இது 1.2சதவீதமாக இருந்தது.

10. ஜி.எஸ்.டி. வரி மூலம் நிதிப்பலன்களை நீண்டகாலத்தில்தான் அடைய முடியும்.

11. ரூபாய் நோட்டு தடையால் குறிப்பிட்ட வேளாண் பொருட்களான சர்க்கரை, உருளைக்கிழங்கு, வெங்காயம், பால் ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

12. தொழில்துறையின் வளர்ச்சி கடந்த நிதியாண்டில் இருந்த 7.4சதவீதத்தைக் காட்டிலும் நடப்பு நிதியாண்டில் 5.2 சதவீதமாகக் குறையும்.

13. கருப்புபண பதுக்கல் காரர்களிடம் இருந்து வரி வசூல் செய்ய தீவிரம் காட்டப்படுகிறது.

14. மாநிலங்கள் வறுமையை ஒழிக்க சர்வதேச அடிப்படை ஊதியம் திட்டம் கொண்டு வரப்படும்.

15.ரூபாய் நோட்டு தடையைத் தொடர்ந்து இயல்பு நிலை திரும்ப வேகமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

16. 2017-18ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகமாக இருக்கும்.

17. நடுத்தர குடும்பத்தினர்கள் வீடு வாங்கும் அளவுக்கு ரியல் எஸ்டேட் விலை குறைந்துள்ளது.

18. 2017 ஏப்ரல் மாதத்துக்குள் நாட்டில் பணத்தட்டுப்பாடு முழுமையாக நீங்கும்.

19. ஸ்வாச் பாரத் திட்டம், பெண்களுக்கு தனிப்பட்ட அடிப்படை உரிமையை அளித்துள்ளது.

20. சேவைத்துறை நடப்பு நிதியாண்டில் 8.9 சதவீதம் வளர்ச்சி அடையும்.

PREV
click me!

Recommended Stories

தமிழக அரசியலில் ட்விஸ்ட்.. புதிய கட்சி தொடங்கினார் சசிகலா.. எம்.ஜி.ஆர், ஜெ., படங்களுடன் கொடி!
21 தான் தர முடியும்.. இஷ்டம்னா இருங்க இல்லைனா.. கெத்து காட்டும் திமுக.. புலம்பும் கதர்சட்டைகள்!