ரூட்ட மாத்துங்க தலைவா ....!! ஸ்டாலினுக்கு புத்தி சொல்லும் தொண்டர்கள்...!!!

Asianet News Tamil  
Published : Jan 31, 2017, 05:07 PM ISTUpdated : Sep 19, 2018, 03:02 AM IST
ரூட்ட மாத்துங்க தலைவா ....!! ஸ்டாலினுக்கு புத்தி சொல்லும் தொண்டர்கள்...!!!

சுருக்கம்

தலைவா கட்சியில் இளைஞர்களுக்கு இடம் கொடுங்கள் , படித்த தமிழ் ஆங்கில நன்கு தெரிந்தவர்களை கட்சிக்குள் கொண்டுவாருங்கள். நேற்று வந்தவர்களை பதவிக்கு கொண்டு வாருங்கள் என்று மு.க.ஸ்டாலினுக்கு முகநூலில் தொண்டர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

மு.க.ஸ்டாலின் தனது முகநூலில் 18.5 லட்சம் பேரை பின்பற்றுபவர்களாக கொண்டுள்ளார். சமீப காலமாக தனது அறிக்கையை முகநூல் வாயிலாக வைத்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் முகநூலில் ஒரு கோரிக்கை ஒன்றை வைத்திருந்தார். அதில் ஆடம்பர விளம்பரங்களைக் கைவிட்டு, இலட்சியத்தை உயர்த்திப் பிடிக்கும் போது பொதுமக்களின் பேராதரவு பெருகும்.

புதிய இளைஞர்கள் நம்முடன் அணிவகுத்து வருவார்கள். வலிமைமிக்க கழகம் புதுப்பொலிவு பெறும். உங்களில் ஒருவனாக மீண்டும் கோரிக்கை விடுக்கிறேன்.. ஆடம்பரப் பேனர்களைக் குறைத்து, அண்ணா கண்ட இருவண்ண இலட்சியக் கொடிகளை உயர்த்துங்கள்.

என்ற கோரிக்கை வைத்திருந்தார். இதற்கு அவருக்கு பதிலளித்துள்ள தொண்டர்கள் தளபதி என்ற பெயரை பொது வெளியில் அழைக்க வேண்டாம் என்ற கோரிக்கையை வைத்துள்ளனர். ஒருவர் தளபதி அதே போன்று சால்வைக்கு பதில் புத்தகம் தர்ச்சொல்லுங்கள் என்று கூறியுள்ளார்.

ஒருவர் கட்சியின் தற்போதைய நிலை குறித்து குமுறியுள்ளார். முகநூலில் பதிவு மட்டும் செய்யாமல் தொண்டர்களின் கருத்தையும் தளபதி கவனிக்க வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பமாக உள்ளது.

தொண்டர்கள் பெயருடன் அவர்கள் பதிவு இதோ...

Pugalendhi Dhanaraj தலைவா சால்வை போர்த்தும் வழக்த்தை மாற்றி புத்தகங்கள் கொடுக்கும்படி உத்தரவே போடவேண்டும் அப்படி செய்வீர்களேயானால் ஒரே வருடத்தில் ஒவ்வொரு திமுக கிளைக்கழகத்திலும் ஒரு நூலகம் உருவாக்க உங்களால் முடியும்......

Sampath Kumar Ask தளபதி அவர்கள் தனக்கு வரவேற்பு பேனர்கள் வேண்டாம் என்ற அறிவிப்பு மிக மிக அருமையான முடிவு! இனி வரும் காலங்களில் தளபதி அவர்களின் பிறந்த நாளான மார்ச் ஒன்றாம் தேதியில் கட்சியின் விழா போல தொண்டர்கள் கொண்டாட வேண்டாம் என்றும் அதை ஒரு பொது நிகழ்ச்சியாக அந்தந்த பகுதியில் உள்ள ஏழை மக்களுக்கும் முதியவர்களுக்கும் ஆதரவு அற்ற அனாதைகளுக்கும் உதவும்படி தொண்டர்கள் இனி செயல்பட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்

Ramesh Ramasamy நீங்கள் தலைமைக்கு வந்தபின்னர் நீங்கள் அறிவித்த இரண்டாவது பெரும் மாற்றம் தரும் அறிவிப்பு இது.

வரவேற்கிறேன் .புதிய கலாச்சாரத்தினைஉருவாக்கி வருகிறீர்கள் .வாழ்த்துக்கள்.

சில யோசனைகள்:

1. தமிழிலும் ஆங்கிலத்திலும் இயல்பாக பேசும் திறன் மற்றும் இயக்க கொள்கைகளில் ஈடுபாடு கொண்ட இளைஞர்களை தெரிந்து அவர்களுக்கு தலைமை பயிற்சி அளித்து கட்சியின் பல்வேறு குழுவில் இடம் பெற செய்க.

2. மாணவர் அணிக்கு இளைஞர் அணிக்கு முக்கிய த்துவத்தை கொடுத்தல்

3. டிவி விவாதங்களுக்கு சரியான நபர்களை அனுப்புங்கள் .

4. அதிக எண்ணிக்கையில் மகளிருக்கு இடம் தருக.

5. டிவி நிகழ்ச்சிகளில் தங்களை தளபதி என்று குறிப்பிடுவதை தவிர்த்தல்

6. ஸ்டாலின் என்ற பெயரில் மாபெரும் சரித்திரம் புரட்சி அடங்கியுள்ளது.

7. இப்போதைய தலமுறை ஸ்டாலின் என்ற பெயரை பெரிதும் விரும்புகின்றனர்

8. கட்சியினரின் விருப்பப்படி தளபதி என்ற அன்பு பெயரினை கட்சி அமைப்புக்குள் மட்டும் இருக்கட்டும் .

9. மாணவர்களிடம் இளைஞர்களிடம் கட்சியை எடுத்துச்செல்ல இவை உதவிடும்.

Smbsak Saksmb தங்களின் நல்ல செயல்பாடுகள் இதமான பேச்சுக்கள் உங்களை மக்கள் மனதில் கட்சி மறந்து நேசிக்க தூண்டுகிறது அதில் நானும் ஒருவன்

இதுதான் நாளை உங்களின் மகத்தான வெற்றிக்கான சான்றுகள்

நல்ல தரமான பேச்சாளர்களைக்கொண்ட தங்களது இயக்கத்தில் தற்போது வெற்றிடம் நான் சொல்வது தரமான நாகரீகமான பேச்சு தங்களின் தற்போதைய பேச்சு நல்ல நடைமுறை என் போன்ற இளைஞர்களை உங்கள் முகம் பார்க்க வைத்திருக்கிறது.

 உங்களைப் பற்றியே எங்கள் நட்பு வட்டாரமும் நண்பர்கள் வட்டாரமும் பேசுகிறது நிச்சயம் உங்கள் உள்ளம் நல்லதை நோக்கி இருக்குமானால் இருக்கிறது மக்கள் மனதை விட்டு உங்களை நீங்கள் நினைத்தால் கூட பிரிக்க முடியாது.

 ஒருவேளை நீங்கள் இதை படித்தால் நொடிக்கு நொடி உங்கள் பேச்சை நடைமுறையை அவதானிக்கும் ஒரு கூட்டம் தமிழ் நாட்டில் மட்டுமல்ல உலகம் வாழும் தமிழர்கள் இருக்கிறார்கள் உங்கள் வளர்ச்சியில் உங்களை வாழ்த்தியவர்களில் இதயப்பூர்வமான மகிழ்ச்சி அடைந்தவனில் நானும் ஒருவன்

அன்புடன் அபுதாபி யிலிருந்து ஹுசைன்

Abu Bakkar செயல் தலைவர் அவர்களே, செயல்படாத மாவட்ட செயலாளர்கள் முதலில் மாற்றுங்கள்.கட்சியில் அடுத்த கட்டத்திற்கு நகரமுடியாமல் மனப்புழுக்கத்தில் உள்ளவர்களுக்கு தகுதியான பொறுப்பை அளித்து அவர்களை அங்கீகரியுங்கள்.

உட்கட்சி தேர்தலில் கட்சிக்காக உழைக்காத,மக்கள் அறிமுகம்,செல்வாக்கு இல்லாத திடீர் பிஸ்னஸ்மேன்,கல்லூரி அதிபர்கள்,ரவுடிகள் எல்லாம் கட்சி பதவியில் அமர்ந்துவிட்டனர்.கட்சி பற்றி ஒரு அடிநாதம் கூட(தமிழே) தெரியாதவன் எனக்கு தெரிந்து ஒன்றிய செயலாளர்.

மதிமுகவில் இருந்த வந்த ஜோயல் மறுநாளே மாநில இளைஞர் அணி பொறுப்பு.இளைஞர் அணியிலே 25ஆண்டுகள் பணியாற்றிவர்கள் தற்பொழுது எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.

அதிமுக இளைஞர்களுக்கு வாய்ப்புகளை அள்ளித்தரும் அட்சய பாத்திரம்.திமுகவில் இருந்தால் கடைசிவரை 10 வகுப்பில் இருந்து தேர்ச்சியே பெற முடியாத அவலநிலையை மாற்றுங்கள் தலைவர் அவர்களே! இது போன்ற பல பதிவுகள் உள்ளன. முல்லை என்பவர் கருத்து சொல்லாதீர்கள் ஓரங்கட்டப்படுவீர்கள் என்று தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

தமிழக அரசியலில் ட்விஸ்ட்.. புதிய கட்சி தொடங்கினார் சசிகலா.. எம்.ஜி.ஆர், ஜெ., படங்களுடன் கொடி!
21 தான் தர முடியும்.. இஷ்டம்னா இருங்க இல்லைனா.. கெத்து காட்டும் திமுக.. புலம்பும் கதர்சட்டைகள்!