ஈரோடு இடைத்தேர்தல்.! திமுகவில் 40 நட்சத்திர பேச்சாளர்கள்.? இபிஎஸ், ஓபிஎஸ் அணியில் எத்தனை பேர் தெரியுமா??

By Ajmal KhanFirst Published Feb 6, 2023, 8:00 AM IST
Highlights

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில், திமுக,அதிமுக, அமமுக, நாம் தமிழர், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்களை கொண்ட பட்டியலை தேர்தல் ஆணையத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. 

ஈரோடு இடைத்தேர்தல்

ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டப்பேரவை தேர்தல் வருகிற 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக திமுக,அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே தங்கள் கட்சி சார்பாக தேர்தல் பொறுப்பாளர்களாக அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் என 100க்கும்  மேற்பட்டவர்கள் கொண்ட  பட்டியல்களை அதிமுக மற்றும் திமுகவினர் வெளியிட்டுள்ளனர். இதனையடுத்து திமுக கூட்டணி சார்பாக போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்புமனு தாக்கல் செய்து தனது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். அதேபோல அதிமுகவினர் இரண்டு பிரிவுகளாக உள்ள ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணியில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஓபிஎஸ் அணியின் வேட்பாளர் செந்தில் முருகன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். எடப்பாடி அணி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால் அந்த அணியின் வேட்பாளர் இன்னும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

அதிமுக - பாஜக கூட்டணி குழம்பி போன குட்டை... கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்!!

திமுகவில் 40 பேர் கொண்ட பட்டியல்

இதனிடையே ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் செய்யவுள்ள நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையத்தில் திமுக, அதிமுக, தேமுதிக, அமமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளை கொடுத்துள்ளன. திமுகவில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன்,டிஆர் பாலு, ஐ பெரியசாமி, கேஎன் நேரு, கனிமொழி, உதயநிதிஸ்டாலின் உள்ளிட்ட 40 பெயர்களை கொண்ட பட்டியலை கொடுத்துள்ளது. அதிமுகவின் இரண்டு பிரிவுகளில் இருந்தும் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. எடப்பாடி அணி சார்பாக முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற் உறுப்பினர்கள் பெயர்களை கொடுக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் அணியின் சார்பாக தங்களது அணியின் முக்கிய நிர்வாகிகள் பெயர்களை கொடுத்துள்ளனர்.

 ஓபிஎஸ்-இபிஎஸ் அணியில் யார் தெரியுமா.?

அமமுக சார்பில் டிடிவி தினகரன், சி ஆர் சரஸ்வதி ஆகியோரும், தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த், சுதிஷ், விஜய பிரபாகரன் உள்ளிட்ட 40 பேர் மற்றும் நாம் தமிழர் சார்பில்  சீமான், வியனரசு உள்ளிட்ட 20 பேர் கொண்ட பட்டியலை அளித்துள்ளனர். இதனிடையே வேட்புமனு தாக்கல் நாளையோடு நிறைவடையவுள்ளது. நாளை மறுதினம் வேட்புமனு பரிசீலனையும், வேட்புமனு திரும்ப பெறப்படவுள்ளது. தற்போது வரை 46 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 

இதையும் படியுங்கள்

உங்க ஈகோவை கழட்டி வையுங்கள்!பதவிக்காக கட்சியை அடமானம் வைத்து விடாதீர்கள்!யாருக்கு அட்வைஸ் செய்கிறார் ஜெ. நிழல்

click me!