நான் ஒரு பொதுக்குழு உறுப்பினர்.. அதிமுகவில் இருந்து எனக்கு இதுவரை எந்த சுற்றறிக்கையும் வரவில்லை.. மைத்ரேயன்.!

By vinoth kumarFirst Published Feb 6, 2023, 6:44 AM IST
Highlights

உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் நிறுத்தப்படப்போவது பொது வேட்பாளரா அல்லது பொதுக்குழு வேட்பாளரா என்ற ஐயம் எனக்குள் எழுந்தது. தற்போதய நிகழ்வுகள் வேட்பாளர் பொது வேட்பாளர் அல்ல என்பது மட்டுமல்ல, பொதுக்குழு வேட்பாளரும் இல்லை.

அதிமுக வேட்பாளர் தென்னரசு பொது வேட்பாளர் அல்ல என்பது மட்டுமல்ல, பொதுக்குழு வேட்பாளரும் இல்லை - அவர் அவைத்தலைவரின் வேட்பாளர்தான் என்பது தெளிவாகிறது என்று மைத்ரேயன் கூறியுள்ளார். 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இபிஎஸ் சார்பில் வேட்பாளராக தென்னரசு அறிவிக்கப்பட்டார். அதேபோல், ஓபிஎஸ் சார்பில் செந்தில் முருகன் போட்டியிடுகிறார். இருவரும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக தெரிவித்தால் இரட்டை இலை முடங்கும் அபாயம் ஏற்பட்டது. ஆகையால், இரட்டை இலை சின்னம் தங்களுக்கு ஒதுக்க கோரி உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி இடையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இதையும் படிங்க;- ஓபிஎஸ் வைத்த அந்த பாயிண்ட்... டோட்டலாக எடப்பாடிக்கு எதிராக மாறிய உச்சநீதிமன்றம் உத்தரவு..!

இது தொடர்பாக வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி மற்றும் ஹிரிஷிகேஷ் ராய் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது,  ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக ஓபிஎஸ் தரப்பையும் உள்ளடக்கிய பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முடிவுகளை எடுக்கலாம் உத்தரவிட்டது. வேட்பாளர் தேர்வு செய்யப்பட்ட முடிவு அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும் என கூறினர்.

இந்நிலையில், சுமார் 2,675 அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து மாதிரி படிவம் அனுப்பி வைக்கப்பட்டு பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்துகள் பெறப்பட்டு தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என இபிஎஸ் தரப்பு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் கடிதங்கை அனுப்பி இருந்தார். அதேபோல், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோருக்கும் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. இபிஎஸ் முன்மொழிந்துள்ள வேட்பாளர் தென்னரசுவை ஏற்கிறேன் அல்லது மறுக்கிறேன் என்ற விவரத்தை ஓபிஎஸ் தெரிவிக்க வேண்டும் என தமிழ்மகன் உசேன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க;- வடஇந்தியாவில் பாஜக என்ன செய்து ஆட்சியை பிடித்தது எங்களுக்கு தெரியும்.. எச்சரிக்கையாக உள்ளோம்.. பொன்னையன்.!

இந்நிலையில், பொதுக்குழு உறுப்பினராக எனக்கு இதுவரை எந்த சுற்றறிக்கையும் வரவில்லை என மைத்ரேயன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முன்னாள் எம்.பி. மைத்ரேயன் தனது முகநூல் பக்கத்தில்;- நான் ஒரு கழக பொதுக்குழு உறுப்பினர். உச்சநீதிமன்ற உத்தரவின்படி இதுவரை - பிப்ரவரி மாதம் 05 ம் தேதி மாலை 4.11 வரை எனக்கு எந்த சுற்றறிக்கையும் வரவில்லை. இப்படிக்கு டாக்டர் வா. மைத்ரேயன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர், கழக அமைப்புச் செயலாளர், கழக பொதுக்குழு உறுப்பினர்.

மற்றொரு பதிவில்;- உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் நிறுத்தப்படப்போவது பொது வேட்பாளரா அல்லது பொதுக்குழு வேட்பாளரா என்ற ஐயம் எனக்குள் எழுந்தது. தற்போதய நிகழ்வுகள் வேட்பாளர் பொது வேட்பாளர் அல்ல என்பது மட்டுமல்ல, பொதுக்குழு வேட்பாளரும் இல்லை - அவர் அவைத்தலைவரின் வேட்பாளர்தான் என்பது தெளிவாகிறது என்று பதிவிட்டுள்ளார். 

click me!