கொரோனா குட்பை சொல்ல கேரளா அரசு பிளாஸ்மா தெரபி மூலம் ஆய்வு..!ஐ.சி.எம்.ஆர் ஒப்புதல்.!!

By Thiraviaraj RMFirst Published Apr 9, 2020, 9:09 PM IST
Highlights

கொரோனா பாதிப்புக்கு மருந்து கண்டறிய பிளாஸ்மா தெரபியைப் பயன்படுத்தக் கேரளா அரசு முடிவு செய்திருக்கிறது. 

T.Balamurukan

கொரோனா பாதிப்புக்கு மருந்து கண்டறிய பிளாஸ்மா தெரபியைப் பயன்படுத்தக் கேரளா அரசு முடிவு செய்திருக்கிறது. அதற்கான அனுமதியையும் ஐ.சி.எம்.ஆரிடம் பெற்றுள்ளது. 

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14.7 லட்சம் என்ற அளவிலும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3.6 லட்சம் என்ற அளவிலும் உள்ளது.கொரோனா  தாக்குதலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85,000 ஐ கடந்துள்ளது. இந்தியாவில் இந்த வைரஸ் பாதிப்பால் 5700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதன் மூலம் 166 பேர் உயிரிழந்துள்ளனர், 473 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.மேலும் ஊரடங்கு நீட்டிக்க மத்திய அரசு அனைத்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.

கேரளா அரசு கொரோனாவில் இருந்து மக்களை காக்க 20ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு மருந்து கண்டறிய "பிளாஸ்மா தெரபியைப் பயன்படுத்தக் கேரளா முடிவு செய்துள்ளது.அதாவது,கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் ரத்தத்திலிருந்து பிளாஸ்மா மாதிரிகளை எடுத்து, அதிலிருந்து கொரோனா எதிர்ப்பு ஆன்டிபாடிகளைப் பிரித்தெடுத்து சிகிச்சைக்குப் பயன்படுத்துவதே இதன் நோக்கம்".ஆகும்.


கொரோனாவிலிருந்து குணமான ஒருவரின் உடலில், கொரோனா எதிர்ப்பு ஆன்டிபாடிகள் இருக்கும்.அவற்றை அடையாளம் கண்டு,பிரித்தெடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்குக் கொடுத்து சிகிச்சையளிப்பதே கேரளாவின் திட்டம்.
இந்த முறையைப் பயன்படுத்தி அமெரிக்கா,சீனா,தென்கொரியா ஆகிய நாடுகள் ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வருகின்றன.இந்தியாவில் 
இந்த முறையைச் சோதனை செய்யக் கேரளா முடிவெடுத்துள்ளது.கேரள அரசின் இந்தத் திட்டத்திற்கு ஐ.சி.எம்.ஆர் அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!