கருணாநிதி நினைவிடத்தை திமுக அறக்கட்டளையிலிருந்து கட்ட வேண்டியதுதானே.. மானாவாரியாக கொந்தளிக்கும் ஹெச்.ராஜா.!

By Asianet TamilFirst Published Aug 30, 2021, 9:59 PM IST
Highlights

திமுகவின் அறக்கட்டளையில் இருந்து கருணாநிதிக்கு நினைவிடம் கட்டி இருக்க வேண்டியதுதானே என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
 

மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் ரூ. 39 கோடி ரூபாய் செலவில் நினைவிடம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த அறிவிப்புக்கு பாஜக மூத்தத் தலைவர்  ஹெச்.ராஜா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சமூக ஊடகப் பக்கங்களில் ஹெச்.ராஜா காணொலி ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், “கருணாநிதி இறந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த மூன்று ஆண்டு காலத்தில் திமுகவின் அறக்கட்டளையில் இருந்து கருணாநிதிக்கு நினைவிடம் கட்டி இருக்க வேண்டியதுதானே. ஏன் நீங்கள் கட்டவில்லை? இன்றைக்கு மக்கள் வரிப்பணத்தில் நினைவிடம் கட்டுகிறார்கள். அண்ணா நினைவு நாளில் சமபந்தி போஜனம் இந்து கோயிலில் செய்கிறாகள். திமுகவுக்கு இதே வேலைதான். இறந்து போன தலைவருக்கு கோயில் பணத்திலிருந்து திவசம் கொடுப்பதா? 
அதை சர்ச்சில் செய், மசூதியில் அதைச் செய். ஆனால், ஏன் இந்து கோயில்களில் மட்டும் அண்ணாவுக்கு சம போஜனம் செய்கிறாய் ? சமபந்தி போஜனத்தினை நான் ஆதரிக்கிறேன். மக்கள் வாழ்க்கையில் அது இருக்க வேண்டும். அதை ஏன் இந்து கோயில்களில் மட்டும் செய்யவேண்டும்? அதைத்தான் நான் கேட்கிறேன். அதே மாதிரி மக்கள் வரிப் பணத்தில் எதற்கு நினைவிடம் கட்டுகிறீர்கள் என்று கேட்கிறேன்” என்று காட்டமாக விமர்சித்திருக்கிறார் ஹெச்.ராஜா. 

click me!