தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டது போல் எடப்பாடி பழனிசாமிக்கு அருகில் இடமானது அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக பட்ஜெட் தாக்கல்
2023-24 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யவுள்ளார். குடும்பத்தலைவிகளுக்கான மாதாந்திர உதவி தொகை, தனி மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தநிலையில், அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் காரணமாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வத்திற்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நீதிமன்றங்களில் சட்ட போராட்டம் நடைபெற்ற நிலையில், அதிமுக பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு வந்துள்ளது. எனவே எடப்பாடி பழனிசாமி அணியினர் சட்டப்பேரவை எதிர்கட்சி துணை தலைவர் பதவியில் இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கி முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்கினர்.
undefined
எந்த இடத்தில் இருக்கை ஒதுக்கீடு
இது தொடர்பான கடிதம் சபாநாயகருக்கு வழங்கப்பட்டது. இருந்த போதும் ஓ.பன்னீர் செல்வத்திற்கு வேறு இடம் ஒதுக்காமல், எதிர்கட்சி துணை தலைவர் இருக்கையே ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போதும் அந்த இருக்கையே ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் எம்எல்ஏவாக கலந்து கொள்கிறார்.
ஈவிகேஎஸ் பங்கேற்பாரா.?
அவருக்கு 177வது இடத்தில் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சிகள் வரிசையில் இரண்டாவது வரிசையில் இடமானது அளிக்கப்பட்டது. நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருத ஈவிகேஎஸ் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதையும் படியுங்கள்
தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்.! இடம்பெறும் முக்கிய அம்சங்கள் என்ன.? என்ன.? தெரியுமா.?