ஆளுநரிடம் காத்திருக்கும் 22 மசோதா.? அரசாணை வெளியிட்டீர்களா.? திமுக- பாஜக போட்டிக்கு போட்டி பேனர் வைத்து மோதல்

By Ajmal Khan  |  First Published Dec 12, 2022, 10:57 AM IST

தமிழக ஆளுநர் மாளிகையில் 20க்கும் மேற்பட்ட மசோதாக்கள் கிடப்பில் இருப்பதாக திமுக எம்பி பேனர் வைத்ததற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக நிர்வாகி மசோதாக்களுக்கு அரசாணை வெளியிட்டீர்களா என கேள்வி எழுப்பி போட்டிக்கு பேனர் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


திமுக அரசுக்கும்- தமிழக ஆளுநர் ஆர் என் ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் ஆளுநர் ஓப்புதல் கொடுக்காமல் கிடப்பில் போட்டிருப்பதாக திமுக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனையடுத்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் புதுக்கோட்டை அப்துல்லா, தமிழக ஆளுநர் மாளிகையில் காத்திருக்கும் மசோதாக்களை பட்டியலிட்டு பேனாராக வைத்திருந்தார். இந்த பேனர் பொதுமக்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்றுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் திமுகவினர் இந்த வாசகத்தை சுவரொட்டியாக அச்சடித்து ஒட்டி வருகின்றனர்.

எனக்கு எதிராக டுவிட் போடும் பெண் நிர்வாகி..! துபாய் சென்றது ஏன்..? யாரை சந்தித்தார்..? ஆதாரம் உள்ளது- அண்ணாமலை

Latest Videos

அந்த போஸ்டரில், 2020 முதல் இந்த ஆண்டு மே 30ஆம் தேதி வரை 22 சட்ட மசோதாக்கள் நிலுவையில் இருப்பதாகவும், நிறைவேற்றப்படாத 22 சட்ட மசோதாக்கள் குறித்து பட்டியல் அச்சிடப்பட்டுள்ளது. ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா, அதில் தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக மற்றும் கால்நடை பல்கலைக்கழகங்களில் ஆய்வு நடத்தவும், விசாரணை செய்வதற்கும் அரசு அதிகாரம் அளிக்கும் வகையில் இரு சட்டத்திருத்த மசோதாக்கள் அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ளன. தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள் பதவிக்காலத்தை ஐந்தாண்டுகளில் இருந்து மூன்று ஆண்டுகளாக குறைப்பது தொடர்பான சட்ட திருத்த மசோதா, மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்கள் நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்குவது தொடர்பான மசோதா உள்ளிட்ட 22  மசோதாக்கள் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு கவர்னரும் தேவையில்லை எனவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாண்டஸ் புயலால் சாதரண காற்று,மழை தான் ! மக்களை காப்பாற்றியது போல் பில்டப் செய்யும் ஸ்டாலின்.? இபிஎஸ் ஆவேசம்

இதற்க்கு பதிலடி கொடுக்கும் வகையில், புதுக்கோட்டையை சேர்ந்த பாஜக நிர்வாகி புதுக்கோட்டை மாவட்ட பா.ஜ.க சார்பிலும், பா.ஜ.க நிர்வாகி சீனிவாசன் நன்றி தெரிவித்து ஒரு பேனரை வைத்திருக்கிறார்.தாங்கள் தெரிவித்த 22 மசோதாவுக்கு அரசாரணை வெளியிடப்பட்டிருக்கிறதா? என்பதை மக்களுக்கு தெரிவித்தால் நன்றி! உங்களிடம் ஆட்சி இருந்தும், ஆளுமை ஆளுநர் தான் என்று மக்களுக்கு தெரிந்துகொள்ள உதவிய தங்களுக்கு நன்றி..! என குறிப்பிட்டுள்ளார். திமுக- பாஜக இடையே போட்டி பேனர் யுத்தம் அரசியல் கட்சிகள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்

ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு கவர்னரும் தேவையில்லை.. கோவையில் திமுக ஒட்டிய பரபரப்பு போஸ்டர் !
 

click me!