ஆன்லைன் சூதாட்டம் மேலும் ஒருவர் தற்கொலை..! கண்டுகொள்ளாத ஆளுநர்- அன்புமணி ஆவேசம்

Published : Dec 11, 2022, 10:48 AM IST
ஆன்லைன் சூதாட்டம் மேலும் ஒருவர் தற்கொலை..! கண்டுகொள்ளாத ஆளுநர்- அன்புமணி ஆவேசம்

சுருக்கம்

ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்த மேலும் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆளுநர் கண்டுகொள்ளாமல் இருப்பது வருத்தம் அளிப்பதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.  

ஆன்லைன் சூதாட்டம்- தற்கொலை

ஆன்லைன் சூதாட்டத்தால் மேலும ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் ஆளுனர் கண்டுகொள்ளாமல் இருப்பது வருத்தமளிக்கிறது எனவும் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த உத்தண்டி வளவு கிராமத்தைச் சேர்ந்த மணிமுத்து என்ற ஓட்டுனர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஆன்லைன் சூதாட்டத் தடை நீக்கப்பட்ட பிறகு, சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் நிகழும் 36-ஆவது தற்கொலை இதுவாகும்.

ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு கவர்னரும் தேவையில்லை.. கோவையில் திமுக ஒட்டிய பரபரப்பு போஸ்டர் !

கண்டுகொள்ளாத ஆளுநர்

ஆன்லைன் சூதாட்டத்தடை அவசர சட்டம் காலாவதியானதற்கு பிந்தைய 12 நாட்களில்  நிகழ்ந்த  நான்காவது தற்கொலை  இதுவாகும் ஆன்லைன் சூதாட்டம் எவ்வளவு கொடியது என்பதற்கு அண்மைக்காலங்களில் அதிகரித்து வரும் தற்கொலைகளே சாட்சி. ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படவில்லை என்றால், அதில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்வது அன்றாட நிகழ்வுகளாக மாறுவதை தவிர்க்க முடியாது! ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது அவசரத் தேவை. ஆன்லைன் சூதாட்டத்தால் நிகழும்  தற்கொலைகளை ஆளுனர் கண்டுகொள்ளாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. சூதாட்டத் தடை சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படியுங்கள்
20 மாதங்களில் போலீஸ் விசாரணைக்கு சென்ற 20 பேர் பலி..! வேடிக்கை பார்க்கும் திமுக அரசு- சீமான் ஆவேசம்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எடப்பாடியின் தூக்கத்தை கெடுத்த Exit POLL முடிவுகள்.! உண்மை நிலவரம் மாறும் என மார்த்தட்டும் தளபதி.! குத்தாட்டம் போடும் திமுக தொண்டர்கள்.!
Exit Poll 2026: மீண்டும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.! தளபதி விஜய் கையில் 24 முத்துக்கள்.! அதிமுகவின் நிலை என்ன தெரியுமா?