தொடரும் தமிழக காவல்துறையின் அடக்குமுறையை கண்டித்து தமிழக பாஜக போராட்டம் நடக்கும் என்று அறிவித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், காவல்துறையினரின் கண்மூடித்தனமான தாக்குதலால் அரியலூர் மாவட்டம் காசாங்கோட்டையைச் சேர்ந்த விவசாயியும், பாஜக தொண்டருமான செம்புலிங்கம் உயிரிழந்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
உயிரிழந்த செம்புலிங்கம் அவர்களின் மகன் மணிகண்டன் அவர்களை இன்று திருச்சியில், மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், அரியலூர் மாவட்ட தலைவர் திரு அய்யப்பன் ஆகியோருடன் சந்தித்து ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துக் கொண்டோம்.
இதையும் படிங்க..பால் விற்பனையாளர் முதல்வரானது எப்படி ? இமாச்சல பிரதேசத்தின் புதிய முதல்வர்.. யார் இந்த சுக்விந்தர் சிங் சுகு ?
உயிரிழந்த செம்புலிங்கம் அவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டோம். மணிகண்டன் அவர்களிடம் காசாங்கோட்டையில் உள்ள அவர்களது இல்லத்திற்கு வந்து அவரது தாயாரை சந்திப்பேன் என்று உறுதி அளித்துள்ளேன்.
இந்த குற்றச் சம்பவத்திற்கு காரணமான காவல்துறையினரின் மேல் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நாளை அரியலூர் மாவட்டத்தில், உயிரிழந்த செம்புலிங்கம் அவர்களுக்கு நீதி கேட்டு, திறனற்ற திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க..மாண்டஸ் புயலில் இருந்து மக்களை காப்பாற்றிய சென்னை மாநகராட்சிக்கு நன்றி.. ட்விட்டரில் குவியும் பாராட்டுக்கள் !!