தமிழகத்தில் தொற்றின் அளவு குறைந்து வருகிறது. விரைவில் நீட் தேர்வில் அடுத்த கட்ட நடவடிக்கை . அமைச்சர் அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published Jun 10, 2021, 11:50 AM IST
Highlights

நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் இன்று மாலை நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகே நீட் தேர்வு குறித்த அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் இன்று மாலை நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகே நீட் தேர்வு குறித்த அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் பொதுமக்கள் மற்றும் சிறுகுறு தொழில் செய்பவர்கள் தங்கள் கைவினை பொருட்களை, கட்டணமின்றி ஆன்லைன் மூலமாக விற்பனை செய்வதற்கான புதிய இணையதளத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், நீட் தேர்வு தொடர்பாக முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் என்றும் நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையிலான ஆலோசனை கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது, அதனை தொடர்ந்தே அடுத்த கட்ட நடவடிக்கைகள் இருக்கும் என கூறினார். கொரோனா பேரிடர் காலங்களில் மருத்துவ பணியாளர்களுக்கான உணவு மற்றும் தங்கும் விடுதிகளில் முறைகேடு என ஆய்வு மேற்கொண்டதில். கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் ஒரு நபரின் ஒரு நாள் உணவு செலவு 570  முதல் 600 ரூபாயாக இருந்தது. தற்போது இது குறித்து விசாரணை மேற்கொண்ட போது உணவகமே வைத்திருக்காதவர்கள் வெளி இடத்தில் உணவை வாங்கி முறைகேடாக பணம் பெற்று வந்தது தெரிய வந்துள்ளது. 

 

தற்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சிறந்த உணவகங்களில் அரசே நேரடியாக பேசியதன் விளைவாக திமுக ஆட்சியில் ஒரு நபரின் உணவின் விலை தற்போது 350-450 ரூபாயாக குறைந்துள்ளது. கடந்த அரசை காட்டிலும் நாள் ஒன்றிற்கு 30 லட்சம் ரூபாய் மருத்துவ பணியாளர்களுக்கு வழங்கப்படும் உணவிலிருந்து சேமிக்கப்படுகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதேபோல் மருத்துவ பணியாளர்களுக்கு தங்கும் விடுதி கட்டணம் கடந்த ஆட்சியில் ரூ.900 செலவழித்த நிலையில் திமுக ஆட்சியில் ரூ.750 ஆக குறைத்துள்ளோம் என கூறினார். மேலும், தடுப்பூசிகள் அளவை ஒன்றிய அரசு மக்களிடம் தெரிவிக்க கூடாது என கூறியுள்ளது. தடுப்பூசி குறித்து மக்களிடையே உண்மை நிலையை தெரிவிப்பதுதான் சரியாக இருக்கும். தற்போது 1060 தடுப்பூசிதான் கையிருப்பில் உள்ளது. ஒன்றிய அரசு தடுப்பூசிகளை அனுப்பியதும் மாவட்டங்களுக்கு பிரித்தளிக்கப்படும். 

தமிழகத்தில் தொற்றின் அளவு குறைந்து வருகிறது என்றும் பாதிப்பின் அளவை விட குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தற்போது அரசு மருத்துவமனைகளில் 45,484 படுக்கைகள் காலியாக உள்ளது. தென் சென்னையில் மருத்துவ கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் கிங்ஸ் மருத்துவமனையில் கூடுதலாக படுக்கைகள் அமைக்கப்பட்டு பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்படவுள்ளது. ஆக்கப்பூர்வமான அறிவுறைகள் அல்லது குறைகளை சுட்டிக்காட்டினால் அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் விமர்சனத்திற்கு பதிலளித்தார். மேலும்  ஐசிஎம்ஆர் விதிகளின் படியே கொரோனா இறப்பு விவரங்கள் அறிவிக்கப்படுகிறது என எதிர்கட்சி தலைவர் பழனிச்சாமிக்கு பதிலளித்தார். 
 

click me!