அதிமுக ஆட்சியில் உணவு வழங்கியதில் முறைகேடு? விசாரணை நடைபெறுகிறது.. சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்..!

By vinoth kumarFirst Published Jun 10, 2021, 11:32 AM IST
Highlights

கடந்த அதிமுக ஆட்சியில் கொரோனா நோய்த்தொற்றின் முதல் அலையின்போது பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நாள் ஒன்றுக்கு ஒரு நபருக்கு உணவு தொகையாக ரூ.600 செலவு செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது. அதில், முறைகேடு ஏதேனும் நடத்துள்ளதா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என கூறினார். 

மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பிரபலமான உணவகங்கள் மூலம் தரமான உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்;- அதிமுக ஆட்சியில் மருத்துவர்கள், செவிலியருக்கு உணவு வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த ஆட்சியில் தினமும் ஒரு நபருக்கு உணவுக்காக ரூ.600 செலவு செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது. கொரோனா பணியில் இருக்கும் மருத்துவர், செவிலியருக்கு ஒருநாள் உணவு செலவு ரூ.350 முதல் ரூ.450ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உணவு விலை நிர்ணயத்தால் தமிழக அரசுக்கு தினமும் ரூ.30 லட்சம் மிச்சமாகிறது. 

அதிகமாக வசூலிக்கப்பட்ட மருத்துவர், செவிலியருக்கான தங்கும் அறை வாடகையும் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் கொரோனா நோய்த்தொற்றின் முதல் அலையின்போது பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நாள் ஒன்றுக்கு ஒரு நபருக்கு உணவு தொகையாக ரூ.600 செலவு செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது. அதில், முறைகேடு ஏதேனும் நடத்துள்ளதா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என கூறினார். 

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டை விடுத்து ஆக்கபூர்வ ஆலோசனைகளை தரவேண்டும். ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கை ஏற்று கிராமப்புறங்களில் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்படும். காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தாத தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். நீட் விலக்கு ஆய்வு குழு கூட்டத்திற்கு பிறகு ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.  தமிழ்நாட்டில் கொரோனா தொடர்ந்து குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் 36 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பு இல்லை. சென்னையில் 1,060 தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளது எனவும் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

click me!