கப்பலில் ஓட்டை விழுந்துவிட்டது... பக்தாஸ் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்..! பிரகாஷ்ராஜ் கிண்டல்..!

Published : May 20, 2021, 03:40 PM IST
கப்பலில் ஓட்டை விழுந்துவிட்டது... பக்தாஸ் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்..! பிரகாஷ்ராஜ் கிண்டல்..!

சுருக்கம்

குருநாதா... உங்களைத் தான் ஊமை குத்து குத்திக்கிட்டு இருக்கார் பிரகாஷ்ராஜ் சார். தரமான ட்வீட். வெள்ளைத் தாடி மனிதர் என்றால் யார் என்பது பக்தாஸுக்கு புரியாது என தெரிவித்துள்ளனர்.

நடிகர் பிரகாஷ் ராஜ் ட்விட்டரில் படு ஆக்டிவாக இருப்பவர். #justasking என்கிற ஹேஷ்டேகுடன் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து அவ்வப்போது கேள்விகள் எழுப்பி வருகிறார்.

கொரோனா வைரஸின் இரண்டாம் அலை இந்தியாவில் சுனாமியாக மாறி பலரை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சூப்பர் டூப்பர் ஹிட்டான டைட்டானிக் ஹாலிவுட் படத்தில் வரும் ஒரு காட்சியின் புகைப்படத்தை போட்டு, கப்பலில் ஓட்டை விழுந்துவிட்டது, மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள், ஆனால் அந்த வெள்ளத்தாடி கேப்டன் பொய் சொல்லிவிட்டார். இது டைட்டானிக் படத்தை பற்றியது என்று பலரும் வாட்ஸ்ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளனர்.

மேலும் சமூக வலைதளங்களிலும் அந்த புகைப்படத்தை போஸ்ட் செய்துள்ளனர். இந்நிலையில் பிரகாஷ் ராஜும் அந்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு கூறியிருப்பதாவது, ‘’டியர் சுப்ரீம் லீடர்... இது டைட்டானிக் பற்றியது...ஆனால் பக்தாஸ் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.. #justasking என தெரிவித்துள்ளார். பெயரை குறிப்பிடாமல் பிரகாஷ் ராஜ் யாரை பற்றி பேசுகிறார் என்பது நன்றாக புரிந்துவிட்டது என சமூக வலைதளவாசிகள் தெரிவித்துள்ளனர். கப்பலோடு சேர்ந்து கேப்டனும் கடலுக்குள் போவது மரபு. நான் டைட்டானிக்கை பற்றி சொன்னேன். ஆனால் வில்லன் பெண் வேடம் அணிந்து படகில் தப்பிவிட்டார்.

 

குருநாதா... உங்களைத் தான் ஊமை குத்து குத்திக்கிட்டு இருக்கார் பிரகாஷ்ராஜ் சார். தரமான ட்வீட். வெள்ளைத் தாடி மனிதர் என்றால் யார் என்பது பக்தாஸுக்கு புரியாது என தெரிவித்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

Tamil Nadu CM Vijay Assembly Speech: தமிழ்நாட்டிற்காக எந்த அவமானத்தையும் தாங்கிக்கொள்வேன்.! சட்டசபையில் அடித்து பேசிய முதல்வர் விஜய்.!
kalaignar karunanidhi: கலைஞரின் வார்த்தை விளையாட்டு.! சொற்களை வீசி சிரிக்க வைத்த வசீகரன்.! பாமர மக்களையும் ரசிக்க வைத்த அல்டிமேட் அரசியல் பேச்சு.!