
தமிழக சட்டப்பேரவை இன்று எம்.எல்.ஏ. இன்பதுரை, காமராஜர் பற்றி கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன், காமராஜர் வாழ்க்கை வரலாறு குறித்து பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் என்று தெரிவித்தார்.
முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்தநாள் வரும் 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
இந்த நிலையில் இன்று சட்டப்பேரவையில் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என தமிழக சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏ. இன்பதுரை கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், காமராஜர் வாழ்க்கை வரலாற்றை பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றார்.
மேலும், சிறந்த பள்ளிகளுக்கு காமராஜர் பெயரில் விருது வழங்குவது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்தார்.