
சுமார் 30 ஆண்டுகள் ஜெயலலிதா திரைக் கதாநாயகியாகவும், முதல் அமைச்சராகவும் கோலோச்சிய இடம் போயஸ் கார்டன் இல்லம். இந்த இல்லத்தை தனதாக்க எவ்வளவு வருஷமா சசிகலா முயற்சி செய்தாங்க. அதிமுகவும் முயற்சி செய்தது. விவேக் ஜெயராமனுக்குத்தான் போகும்னு சொன்னார்கள். இப்போது அந்த போயஸ் கார்டன் இல்லத்து சாவி மதுக்குட்டி கையில் சிக்கி விட்டது.
ஆம். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக்கிடம் அதிகாரப்பூர்வமாக இன்று ஒப்படைக்கப்பட்டது. போயஸ் இல்லத்தை அரசுடைமை ஆக்கியது செல்லாது என்றும் 3 வாரங்களுக்குள் வீட்டு சாவியை தீபா மற்றும் தீபக்கிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உயர்நிதிமன்றம் உத்தரவிட்டது.
ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது வாரிசுகளான அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் போயஸ் இல்லத்தை அரசுடைமை ஆக்கியது செல்லாது என்றும் 3 வாரங்களுக்குள் வீட்டு சாவியை தீபா மற்றும் தீபக்கிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதையடுத்து சாவியை பெறுவதற்காக தீபா, தீபக் இருவரும் இன்று சென்னை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். வீட்டுச்சாவியை கலெக்டர் விஜயராணி அவர்களிடம் வழங்கினார்.
இதுபற்றி கலெக்டர் விஜயராணி கூறும்போது, ‘நீதிமன்ற உத்தரவின்படி வீட்டுச்சாவியை கேட்டு தீபா, தீபக் இருவரும் மனு செய்து இருந்தனர். இது குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று ஆலோசிக்கப்பட்டது. அதன்பேரில் இன்று போயஸ் இல்ல சாவி அவர்களிடம் வழங்கப்பட்டது’ என்றார். அதனைத் தொடந்து போயஸ்கார்டன் வீட்டை திறந்து தீபக்கும், தீபாவும் பார்வையிட்டனர். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது தீபாவு, தீபக்கும் போயஸ் கார்டன் இல்லத்திற்குள் நுழந்திருக்கக்கூட முடியாது. இப்போது அந்த இல்லமே அவர்களுக்கு சொந்தமாகி விட்டது. இதுதான் விதி. தீபா அவரது கணவருடன் மொட்டை மாடியில் உற்சாகமாக கை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுதினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தீபா, தனது வாழ்வில் இப்படியொரு திருப்பம் ஏற்படும் என எதிர்பார்க்கவில்லை என்றும் வீட்டை மீட்பதற்கு தன்னால் முடிந்த அளவு முயற்சி செய்தாகவும் கூறினார். வேதா இல்லத்தில் வசிக்க முடிவு செய்துள்ள்தாக குறிப்பிட்ட தீபா, வேதா இல்ல சாவியை பெற்றுக்கொண்டதன் மூலம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆத்மா சாந்தியடையும். என்னைப் பொருத்தவரை இது எப்போதுமே என் அத்தைவீடு; பராமரிப்புபணிகளை மேற்கொள்வதே முதல் பணி. ஜெயலலிதா வீட்டை வைத்து அதிமுக அரசியல் செய்கிறது. இது போராட்டம் மட்டுமல்ல, உரிமை போராட்டத்திலும் வெற்றி. எங்கள் குடும்பத்திற்கு எல்லாமுமாக இருந்தவர் ஜெயலலிதா. அதிமுக வழக்கு தொடர்ந்தால் சட்டரீதியாக சந்திக்க தயார் எனவும் தெரிவித்தார்.
எத்தனையோ வருஷம் கஷ்டப்பட்டு சேர்த்த பணம் யார் யாருக்கோ போகிறது. இந்த ஒரு விஷயத்தில் கருணாநிதி அளவுக்கு ஜெயலலிதா அவ்வளவு உஷார் கிடையாது. நாகூர் பிரியாணி உளுந்தூர்பேட்டைல இருக்கற அந்த நாய்க்கு கிடைக்கணும் இருந்தா அதை யாராலயும் மாத்த முடியாது’’ என அதிமுகவினர் அங்கலாய்த்துக் கொள்கின்றனர். அதிமுக அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறதோ..?