ஆணவத்தின் உச்சம்.. அரை மணி நேரமாக பிரதமரை காக்க வைத்த மம்தாவின் திமிர்த்தனம்.. எங்கபோய் முடியுமோ.?

By Ezhilarasan BabuFirst Published May 29, 2021, 9:25 AM IST
Highlights

பிரதமரின் தலைமையிலான ஆய்வுக் கூட்டத்திற்கு அரை மணி நேரம் தாமதமாக  வந்தது மட்டுமல்லாமல் அங்கிருந்த அதிகாரிகளிடம் மட்டும் சில ஆவணங்களை கொடுத்து விட்டு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூட்டத்திலுருந்து ஒரு சில வினாடிகளில் வெளியேறிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

பிரதமரின் தலைமையிலான ஆய்வுக் கூட்டத்திற்கு அரை மணி நேரம் தாமதமாக  வந்தது மட்டுமல்லாமல் அங்கிருந்த அதிகாரிகளிடம் மட்டும் சில ஆவணங்களை கொடுத்து விட்டு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூட்டத்திலுருந்து ஒரு சில வினாடிகளில் வெளியேறிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மம்தாவின் இந்த செயலை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் மோடிக்கும் மம்தாவுக்குமான மோதல் பன்மடங்கு அதிகரித்துள்ளது என்றே கூறலாம். அதாவது,  எப்படியேனும் மேற்கு வங்கத்தில் மம்தாவை வீழ்த்திவிட வேண்டும் என அத்தனை முயற்சிகளையும் மோடி தலைமையிலான பாஜக அரசு மேற்கொண்டது. மம்தா பானர்ஜிக்கு நம்பிக்கைக்குரிய முக்கிய அரசியல் தலைவர்களையும், பாஜக தன்வசம் இழுத்தது. ஆனாலும்கூட மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் மம்தா பானர்ஜி தொடர்ந்து இரண்டாவது முறையாக  அமைச்சராக அரியணை ஏறியுள்ளார். இந்நிலையில் வங்கக்கடலில் உருவான யாஸ் அதி தீவிர புயலாக வலுபெற்று ஒடிசா மாநிலம் பாத்ரக் மாவட்டம் தாம்ரா துறைமுகம் அருகே கரை கடந்தது. சுமார் 130 கிலோ மீட்டர் முதல் 140 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியது. 

யாஷ் புயலால் ஒடிசா மேற்கு வங்கத்தில் பலத்த சேதம் அடைந்தது, இதுவரை இரு மாநிலங்களிலும் சேர்த்து நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு வங்கத்தில் மட்டும் கிட்டத்தட்ட 15 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 3 லட்சம் வீடுகள் புயலால் சேதமடைந்துள்ளது. மம்தா பானர்ஜி தனது மாநிலத்தில் சூறாவளி பாதிப்புக்கு  நிவாரணமாக 15 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் நேற்று ஒரிசா மற்றும் மேற்கு வங்கத்தில் ஏற்பட்டுள்ள புயல் பாதிப்புகளை பிரதமர் மோடி நேரடியாக ஆய்வு செய்தார். அதற்கு முன்னதாக சூறாவளி புயல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மேற்கு வங்கத்தில் மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள கலைகுண்டா விமானதளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.  யாஷ் சூறாவளியால் ஏற்பட்ட சேதத்தை மதிப்பிடுவது தொடர்பாக பிரதமர் மோடி- மம்தா பானர்ஜி இடையே 15 நிமிடம் ஆய்வு கூட்டம் நடைபெறும் என ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  

திட்டமிட்டபடி குறிப்பிட்ட நேரத்தில் பிரதமர் மோடி தலைமையில் கூட்டம் தொடங்கியது, ஏப்ரல்-மே சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு பிரதமர் மோடி மற்றும் முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோருடன் நடைபெறும் முதல் சந்திப்பு கூட்டமாக இது இருக்கும் என கூறப்பட்டது. அதேபோல் இக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சுபேந்து அதிகாரி, மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர். ஆனால் ஆய்வுக் கூட்டம் தொடங்கி அரை மணி நேரம் ஆகியும் மம்தா பானர்ஜி மற்றும் மேற்கு வங்க அதிகாரிகள் யாரும் ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. பிரதமர் ஆளுநர் உள்ளிட்டோர் மாநில முதலமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்காக காத்திருந்தனர். ஆனால் அரை மணி நேரத்திற்கு பின்னரே மம்தா, மேற்குவங்க அதிகாரிகள் கூட்டத்திற்கு வந்தனர். அங்கு வந்த மம்தா பேனர்ஜி சில ஆவணங்களை தனது அதிகாரிகளிடம் மட்டும் வழங்கிவிட்டு, அங்கிருந்து உடனடியாக வெளியேறினார். பிரதமர் மோடியை அரை மணி நேரம் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கூட்டத்திலிருந்து உடனடியாக மம்தா வெளியேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமரை அவமதிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் மம்தா செயல்பட்டிருக்கிறார் என்பதை இது வெளிப்படையாக காட்டுகிறது. அவரின் இந்த செயல் குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர். ஆனால் இவற்றையெல்லாம் பொருட்படுத்தாத பிரதமர் மோடி, மேற்கு வங்க அதிகாரிகளுடன் தொடர்ந்து உரையாடினார். அதன்பின்னர் அவர் யாஷ் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள்  அதாவது அம்மாநிலத்தின் பேரழிவை சந்தித்துள்ள தெற்கு மற்றும் வடக்கு 24 பர்கானாஸ், திகா, கிழக்கு மெடினிப்பூர் மற்றும் நந்திகிராம் உள்ளிட்ட மாவட்டங்களை வான்வழி வாயிலாக பார்வையிட்டார். முதல்வர் மம்தாவின் இந்த ஆணவச் செயல் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது 
 

click me!