தூத்துக்குடியில் பெரும் கலவரம்...! வன்முறையைக் கட்டுப்படுத்த போராடும் மாவட்ட நிர்வாகம்...!

Asianet News Tamil  
Published : May 22, 2018, 01:08 PM ISTUpdated : Sep 19, 2018, 02:24 AM IST
தூத்துக்குடியில் பெரும் கலவரம்...! வன்முறையைக் கட்டுப்படுத்த போராடும் மாவட்ட நிர்வாகம்...!

சுருக்கம்

The great riots in Tuticorin

தூத்துக்குடி வன்முறையைக் கட்டுப்படுத்த கூடுதல் போலீசார் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், வன்முறையைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும், நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகவும் கூறி அப்பகுதி மக்கள் கடந்த 100 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

வேதாந்த நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை மேற்கொள்ள இருந்த நிலையில், விரிவாக்கம் செய்யக் கூடாது என்றும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். 

ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து மத்திய - மாநில அரசுகள் எந்த நடவடிக்கை எடுக்காத நிலையில் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  100
நாட்களாக போராட்டம் நடந்து வரும் நிலையில் போராட்டம் நடத்துவதற்கு 144 தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

தடையை மீறி ஆயிரக்கணக்கான மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி இன்று பேரணி சென்றனர். இந்த போராட்டத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். பேரணி சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது.

போராட்டக்காரர்கள் காவல் வாகனத்தை கவிழ்த்தும், கல்லெறிந்தும் நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. ஆர்ப்பாட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தி கட்டுப்படுத்த முயன்று வருகின்றனர். இதனால் பேரணியில் சென்றவர்கள் சிதறி ஓடினர். அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ள்னர். இதனால் அப்பகுதி போர்க்களமாக காட்சி அளிக்கிறது. காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் பல்வேறு வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. 50-க்கும் மேற்பட்ட அடித்து நொறுக்கியு, தீ வைக்கப்பட்டுள்ளது. போராட்டக்கார்கள் மீது போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசினர்.

இந்த நிலையில் போலீசாரின் தடுப்பையும மீறி போராட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்தனர். அங்கு சென்ற போராட்டக்காரர்கள், ஆட்சியர் அலுவலகத்தின் கண்ணாடிகளை கல் கொண்டு எறிந்து அடித்து நொறுக்கினர். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப்பையும் அவர்கள் தாக்கினர்.

இதனால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏறப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆட்சியர் அலுவலக ஊழியர்கள், பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அவர்கள் எஸ்.பி. அலுவலகத்தில் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  

இந்த நிலையில் போராட்டக்காரர் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியானார். இதையடுத்து, ஆட்சியல் அலுவலகத்துக்குள் இருந்து போராட்டக்காரர்கள் சிதறி ஓடினர். தற்போது ஆட்சியர் அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

4 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெறும் வன்முறையைக் கட்டுப்படுத்த தூத்துக்குடிக்கு கூடுதல் போலீசார் அனுப்பப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. வன்முறையைக் கட்டுப்படுத்துவது குறித்து மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

ஸ்டெர்லைட் ஊழியர்களின் 6 மாடி குடியிருப்பு ஒன்றுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர். தற்போது 6 மாடி குடியிருப்பு தீப்பற்றி எரிந்து வருகிறது.

PREV
click me!

Recommended Stories

கம்முன்னும், உம்முன்னும் இருக்கும் விஜய்.! இதுதான் காரணமாம்.! அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.!
திமுக கோட்டையில் ஓட்டை போடுவாரா விஜய்? தளபதியின் வெற்றி வாய்ப்பை தீர்மானிக்கும் அந்த ஒரு தொகுதி!