
கடலூரில் ஆய்வு செய்ய சென்ற ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அங்கு குளித்து கொண்டிருந்த இளம்பெண்ணை பார்த்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது. இதைப்பார்த்த அந்த பெண் அலரியடித்து கத்தியதால் ஊர்மக்கள் கூடினர்.
தமிழகத்தின் புதிய ஆளுநராக பொறுப்பேற்றுள்ள பன்வாரிலால் புரோகித், சமீபத்தில் கோயம்புத்தூரில் நேரடியாக பல பகுதிகளுக்கும் சென்று ஆய்வு நடத்தினார். மேலும் கோவை மாவட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசனைக் கூட்டமும் நடத்தினார். இதனால் தமிழக எதிர்கட்சிகள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதைதொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு மேற்கொள்ள இருப்பதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து, திமுகவினர், ஆய்வுக்கு வரும் கவர்னருக்கு கடலூர் கருப்புக் கொடி ஏந்தி ஆர்பாட்டம் செய்து எங்கள் எதிர்ப்பைக் காட்டுவோம் என அறிவித்தனர்.
அதனபடி இன்று கடலூரில் ஆய்வு மேற்கொண்ட ஆளுநர் புரோஹித்துக்கு எதிராக திமுகவினர் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து ஆளுநர் ஆய்வு செய்யும் இடங்களை திட்டமிட்டுவைத்திருந்த பிளான் மாறி போனது.
தொடர்ந்து வண்டிப்பாளையம், அம்பேத்கர் நகர் முதலான பகுதிகளுக்கு ஆளுநர் சென்றார். அம்பேத்நகரின் தெருக்களுக்குள் செல்லும் போது, வீட்டு வாசலில் உள்ள கீற்று மறைப்புக்குள் இருந்த தடுப்புகளை அகற்றிவிட்டு தூய்மை இந்தியா திட்டத்தை ஆய்வு மேற்கொள்ள சென்றார்.
ஆனால் அது குளியலறை என தெரியாமல் வந்த ஆளுநரை கண்டு அங்கு குளித்து கொண்டிருந்த இளம்பெண் பதறிப்போனார். இதையடுத்து ஆளுநரும் அதிகாரிகளும் அங்கிருந்து நகர்ந்தனர்.
பெண்களின் சத்தத்தை கேட்ட பொதுமக்கள் ஆளுநரை சூழ்ந்து கொண்டனர். இதனால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.