
எடப்பாடி தலைமையிலான அரசு வலுவிழந்து செயல்படுவதாகவும், இணைப்பு பேச்சுவார்த்தை குறித்து ஒ.பி.எஸ் தான் முடிவு செய்வார் எனவும் ஒ.பி.எஸ் அணி ஆதராவாளர் மேட்டூர் எம்.எல்.ஏ செம்மலை தெரிவித்துள்ளார்.
ஒ.பி.எஸ் அணியும் இ.பி.எஸ் அணியும் இணைவர்தர்கான பேச்சுவார்த்தை குறித்து பல்வேறு முடுக்கு போட்ட மேட்டூர் எம்.எல்.ஏ செம்மலை தற்போது சூசமாக பேச ஆரம்பித்துள்ளார்.
ஆங்கில பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்த செம்மலை கூறுகையில், மத்திய அமைச்சர் தலைமை செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடத்தியது போன்று இதுவரை நிகழ்ந்ததே இல்லை எனவும், எடப்பாடி பழனிசாமி அரசு பலவீனமாக இருப்பதால் பா.ஜ.க பரிசோதித்து பார்ப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
வருமான வரி சோதனைக்கு உள்ளான அமைச்சர், மற்றும் வழக்குபதிவு செய்யப்பட்ட அமைச்சர்கள் மீது எடப்பாடி எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை எனவும், ஜெயலலிதாவின் அரசாக இருந்தால் தூக்கி எரிய பட்டிருப்பார்கள் எனவும் குற்றிபிட்டுள்ளார்.
தற்போதைய அரசு பணத்தின் மூலமே எதையும் சாதிக்கலாம் என்று கருதுவதாகவும், நீட், போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் போன்ற பிரச்சனைகளில் அரசு திறமையான முறையில் கையாளவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அரசும், கட்சியும் தலை இல்லாத கோழி போல் இருப்பதாகவும், ஒ.பி.எஸ்க்கு கட்சி தொண்டர்கள் மற்றும் மக்கள் ஆதரவு இருந்து வருவதாகவும் கூறியுள்ளார்.
இணைப்பு பேச்சு வார்த்தை குறித்து ஓ.பி.எஸ். தான் முடிவு செய்வார் எனவும், செம்மலை தெரிவித்துள்ளார்.