தீபாவளிக்கு குறைந்த விலையில் காய்கறிகள்: வெள்ளிக்கிழமையும் இயங்குகிறது கோயம்பேடு மார்க்கெட்

By Ezhilarasan BabuFirst Published Nov 9, 2020, 5:40 PM IST
Highlights

தற்போது வெங்காயத்தின் விலை 30 முதல் 65 வரை மட்டுமே உள்ளதாக கூறிய அவர், 80 ரூபாய்க்கு வெங்காயம் விற்கப்படவில்லை என்றார் காய்கறி வரத்து அதிகரிகத்துள்ளதால் பொங்கல் பண்டிகைக்குள் காய்கறிகளின்  விலை வெகுவாக குறைந்து விடும் எனவும் தெரிவித்தார்.

தீபாவளியையொட்டி கோயம்பேடு சந்தைக்கு வெள்ளிக்கிழமைக்கு பதிலாக ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கப்படும் என கோயம்பேடு மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் ராஜசேகர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீபாவளியை முன்னிட்டு மொத்த வியாபார கடைகளுக்கு வெள்ளிக்கிழமைக்கு பதிலாக  ஞாயிற்றுகிழமை விடுமுறை அளிக்கப்படும் என்றும் வரும் சனிக்கிழமை தீபாவளி பண்டிகை வருவதால் வெள்ளி கிழமை விடுமுறை அளித்தால் பொதுமக்களுக்கு காய்கறியும் கிடைக்காது என்றார்.அதேபோல் வியாபாரிகளுக்கு வியாபாரமும் பாதிக்கப்படும் என்பதை கருத்தில் கொண்டு தீபாவளிக்கு மறுநாள் ஞாயிறு விடுமுறை அளிக்கப்படும் என்றார். 

உள்ளூர் வெங்காயம் மட்டுமே தற்போது விற்பனை செய்யப்படுவதாக கூறிய அவர் சென்னையில் வெங்காயம் பதுக்கல் கிடையாது எனவும்,
இங்கு உப்பு காற்று அதிகமாக இருப்பதால் எந்த சரக்கை பதுக்கினாலும் வீணாகி விடும், ஆகையால் வெங்காயம் பதுக்கலுக்கு வாய்ப்பே இல்லை என்றார். தற்போது வெங்காயத்தின் விலை 30 முதல் 65 வரை மட்டுமே உள்ளதாக கூறிய அவர், 80 ரூபாய்க்கு வெங்காயம் விற்கப்படவில்லை என்றார். காய்கறி வரத்து அதிகரிகத்துள்ளதால்  பொங்கல் பண்டிகைக்குள் காய்கறிகளின்  விலை வெகுவாக குறைந்து விடும் எனவும் தெரிவித்தார். 

மேலும் வரும் 16ம் தேதி சிறு மொத்த வியாபார கடைகள் திறந்தாலும் பொதுமக்கள் இங்கு வர வேண்டாம் என கேட்டு கொண்ட அவர் பண்டிகை நாட்களாக இருந்தாலும் மக்கள் அருகில் உள்ள கடைகளிலோ, சூப்பர் மார்க்கெட்டுகளிலோ வாங்கி கொள்ளலாம், அங்கும் விலை குறைவாக கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.

 

click me!