
இரட்டை இலையும் கட்சியின் பெயரும் மட்டும் தான் அவர்களுக்கு சொந்தம் என்று தேர்தல் அறிவித்துள்ளதாகவும் ஆனால் கட்சியின் பொதுச்செயலாளர் என்றுமே சசிகலா தான் எனவும் டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. அப்போது ஆர்.கே.நகர் தேர்தல் அறிவிப்பின் போது சசிகலா தரப்பும் ஒபிஎஸ் தரப்பும் இரட்டை இலை சின்னத்திற்கு போட்டி போட்டது.
இதனால் குழம்பிய தேர்தல் ஆணையம் சின்னத்தை முடக்கியது. இதையடுத்து டிடிவி தரப்பும் ஒபிஎஸ் தரப்பும் பிரமான பத்திரங்களை தாக்கல் செய்தனர்.
இதனிடையே ராஜ தந்திரமாக திட்டம் தீட்டிய எடப்பாடி, டிடிவியை கழட்டிவிட்டு ஒபிஎஸ்சை இணைத்து கொண்டார்.
இந்நிலையில் நேற்றுமுன் தினம் இரட்டை இலையும் கட்சியின் பெயரும் மதுசூதனன் அணிக்கே என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.
அதன்படி தற்போது அதிமுக என்ற பெயரும் இரட்டை இலை சின்னமும் எடப்பாடி பக்கம் வந்துள்ளது.
ஆனால் தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு குறித்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செல்வோம் என டிடிவி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த டிடிவி ஆதரவாலர் தங்க தமிழ்செல்வன், வரும் 27 ஆம் தேதி அதிமுக அம்மா அணியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் எனவும் 29 ஆம் தேதி ஆட்சி மன்ற கூட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.
கட்சி, சின்னம் இரண்டுக்கு மட்டும் தான் தேர்தல் ஆணையம் முழு தீர்ப்பு வழங்கியுள்ளதாகவும் கட்சியின் பொதுச்செயலாளர் குறித்து தேர்தல் ஆணையம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை எனவும் குறிப்பிட்டார்.
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தான், துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தான் என வலியுறுத்தினார்.