மீன்பிடி தடை காலத்தை தடை செய்யக்கூடாது, நிவாரணம் 30 ஆயிரம் வழங்க வேண்டும். குமரியில் இருந்து ஒலிக்கும் குரல் !

By Thiraviaraj RMFirst Published Apr 3, 2020, 8:32 AM IST
Highlights

ஊரடங்கு உத்தரவு நிறைவடைந்ததும, தொடங்கும் இந்த ஆண்டின் மீன்பிடி தடை காலத்தை அமல்படுத்தாமல்  சிறப்பு ஆணை வழங்கி அதனை ரத்து செய்யவேண்டும் என தமிழக அரசுக்கு அகில இந்திய மீனவர் முன்னணி தலைவர் நாஞ்சில் மைக்கேல் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

T.Balamurukan

ஊரடங்கு உத்தரவு நிறைவடைந்ததும, தொடங்கும் இந்த ஆண்டின் மீன்பிடி தடை காலத்தை அமல்படுத்தாமல்  சிறப்பு ஆணை வழங்கி அதனை ரத்து செய்யவேண்டும் என தமிழக அரசுக்கு அகில இந்திய மீனவர் முன்னணி தலைவர் நாஞ்சில் மைக்கேல் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தின் கடல் பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டு கிழக்கு பகுதி, மேற்கு பகுதி என இரண்டு கால கட்டங்களாக மீன்பிடி தடைக்காலம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 14ஆம் தேதி வரை கிழக்குப் பகுதியில் 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த காலகட்டத்தில் மீனவர்கள் விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகளில் கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. அதன்படி இந்த வருடம் வருகிற பதினைந்தாம் தேதி முதல் கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடித்துறைமுகத்தை மையமாக கொண்டு மீன்பிடிப்பவர்களுக்கு  தடை காலம் துவங்குகிறது. 

இதுகுறித்து அகில இந்திய மீனவர் முன்னணி தலைவர்  நாஞ்சில் மைக்கேல்  செய்தியாளர்களிடம் பேசும் போது.., "கடந்த வருடம் மீனவர்களின் தடைகாலம் முடிந்து கடல் சீற்றம் போன்ற காரணங்களால் நூறு நாட்களுக்கும் மேலாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை, இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க வருகிற 14-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு நிறைவடைந்தவுடன் மீன்பிடி தடை காலம் துவங்குகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. அடுத்தடுத்து வரும் தடைகளால் மீனவர்கள் அன்றாட தேவைகளுக்கு வருமானம் இன்றி, தங்கள் குழந்தைகளின் பள்ளிக்கூட கல்லூரி கட்டணம் கட்ட கூடமுடியாமல் குழந்தைகளின் கல்வியை நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் குடும்பத்தின் மருத்துவ செலவு மற்றும் அன்றாட வாழ்வை நடத்துவதற்கே கஷ்டப்பட்டு  வருகின்றனர். இந் நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் என்னும் கொடிய நோய் அச்சுறுத்தலின் எதிரொலியால் மீனவர்கள் மீண்டும் மீன்பிடி தொழில் செய்ய முடியாத நிலை  ஏற்பட்டு  நேரடியாகவும், மறைமுகமாகவும்  தமிழகத்தில் மட்டும்  இரண்டு கோடிக்கும் மேலான குடும்பங்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர் .இதனால் இந்த ஆண்டு மீன்பிடி தடை காலத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் இந்த ஆண்டு மீன்பிடி தடை காலத்திற்கு வழங்கப்படும் நிவாரணத்தை ரூபாய் 30,000 ஆக அதிகரித்து தர வேண்டும் எனவும் அவர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

click me!