கொரோனாவை தடுக்க வீட்டை விட்டு வெளியில் வராதீர்கள் மக்களே.! மீறினால் 2 ஆண்டு சிறை தண்டனை மத்திய அரசு உத்தரவு.

By Thiraviaraj RMFirst Published Apr 2, 2020, 9:28 PM IST
Highlights

கொரோனா வைரஸ் கொடூரம் பற்றி அறியாத மக்கள்,வீட்டிற்குள் முடங்காமல் வெளியில் சுற்றிக் கொண்டே இருக்கிறார்கள். எந்த விதத்திலும் சமூக பரவல் வந்துவிடக்கூடாது என்பதில் அரசு கவனமாக இருந்து வருகிறது. நாளுக்கு நாள் இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதையெல்லாம் கட்டுப்படுத்துவதற்கு கடுமையான சட்டத்தை தவிர வேறுவழியில்லை என்று கருதியது மத்திய அரசு. அதனால் தான் உள்துறை அமைச்சகம் "வெளியில் சுற்றினால் ,வெளியே வந்தால் 2ஆண்டுகள் சிறை தண்டனை என அறிவித்திருக்கிறது".

T.Balamurukan

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  இதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டது.  இதன்படி, பொதுமக்கள் தேவையின்றி வீட்டைவிட்டு வெளியில் வர தடை விதிக்கப்பட்டு உள்ளது.இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவை மீறும் நபர்கள் மீது, இந்திய தண்டனை சட்டம் மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005ன் பிரிவுகளின் கீழ் 2  ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும்படி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

இதுபற்றி அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் வழியே தகவல் தெரிவித்து இருக்கிறார்.அந்த கடிதத்தில், கடந்த மார்ச் 24ந்தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை மீறும் எந்த நபரும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்.  விதிமீறலில் ஈடுபடுவோர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.  இதேபோன்று, வதந்தி பரப்பினாலும் அவர்கள் மீது அபராதத்துடன் கூடிய 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
click me!