நாளை இதைத்தான் பேசப்போகிறார் மோடி..? படபடப்பாக காத்திருக்கும் மக்கள்..!

By Thiraviaraj RMFirst Published Apr 2, 2020, 6:53 PM IST
Highlights

நாளை காலை 9 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஒரு செய்தி அடங்கிய காணொளியை வெளியிடப் போவதாக தெரிவித்துள்ளார்.
 

நாளை காலை 9 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஒரு செய்தி அடங்கிய காணொளியை வெளியிடப் போவதாக தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றைத் தடுக்க ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அறிவித்து 8 நாட்கள் ஆகின்றன. கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் சூழலில், ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்தது. அதுகுறித்து இன்று அனைத்து மாநில முதல்வர்களுடனும் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார் பிரதமர் மோடி.

இந்நிலையில், கோவிட் -19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான மோடி அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து பல கேள்விகள் முளைத்துக் கொண்டே இருந்தாலும், அவை விடை தெரியா வினாக்களாகவே தொக்கி நிற்கின்றன. எந்த நிலையிலும் வெளிப்படைத் தன்மை என்பதே இல்லை என ஆதங்கப்பட்டு வருகின்றனர் அரசியல் விமர்ச்கர்கள். இந்நிலையில் நாளை காலை 9 மணிக்கு நாட்டு மக்களுடன் சில முக்கிய தகவல்களைக் காணொலி மூலம் பகிரவுள்ளதாக பிரதமர் மோடி தனது டிவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனோ வேகமாக பரவி வரும் நிலையில் நாளை மோடி பேசபோவது என்ன  என்கிறன் எதிர்பார்ப்பு மக்களிடையே பதபதைப்பை ஏற்படுத்தி இருக்கிறது இந்நிலையில் அவர் பேசப்போவது, ‘’ஊரடங்கு நீட்டிப்பு குறித்தா? அல்லது கொரோனா விழிப்புணர்வு பேச்சா? நடவடிக்கைகளை கடுமையாக்குவது குறித்தா?  அல்லது ஆதங்கத்தை கொட்டித் தீர்க்கப்போகிறாரா? என விவாதங்கள் அனல் பறந்து வருகிறது. 

click me!