திமுக பதவியேற்றதும் முதல் டார்க்கெட்... மு.க.ஸ்டாலின் வளைந்து செல்வாரா..? வகிடெடுப்பாரா..?

By Asianet TamilFirst Published May 3, 2021, 3:47 PM IST
Highlights

தற்போது திமுக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து விட்டது. அதற்காக விடப்பட்ட டெண்டர் பணத்தின் கமிஷனை வசூலிக்காமல் இருக்கிறார் நந்தகுமார்.

சென்னை பெருநகராட்சி தலைமை பொறியாளாக இருக்கும் நந்தகுமார் மீது அடுக்கடுக்கான புகார்கள் குவிந்து கிடக்கின்றன. பினாமி ஒப்பந்தகாரர்கள் மூலம் ஏகப்பட்ட லஞ்ச பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்திருப்பதற்கான ஆதாரங்களை சேகரித்து பெருநகராட்சி மேலிடத்துக்கு சிலர் அனுப்பி வைத்து காத்திருக்கின்றனர். ஆனால், மேலிடம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இப்போது இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்க இருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்து விட்டது. அடுத்து மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றவுடன் நந்தகுமார் மீது நடவடிக்கை எடுக்கத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. 

சிறப்பு திட்டங்கள், மழைநீர்வடிகால் துறை, பேருந்து சாலைகள் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு முன்பு கண்காணிப்பு பொறியாளராக இருந்த நந்தகுமார் தான், தற்போது தலைமை பொறியாளராக இருக்கிறார். தலைமைப் பொறியாளர் நந்தகுமார் தனக்கு வேண்டியர்களுக்கு மட்டுமே திரும்பத் திரும்ப ஒப்பந்தம் கொடுத்திருப்பதாகவும், அந்த ஒப்பந்ததாரர்களும் அவருடைய பினாமிகள் என்றே சென்னை மாநகராட்சி வட்டாரம் பேசிக்கொள்கிறது. இப்படி ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் இவர் மீது இருப்பதாக கூறுகிறார்கள். 
 
இதுகுறித்து மாநகராட்சி ஒப்பந்தகாரர் ஒருவர் கூறுகையில், ‘’தேர்தலுக்கு முன்பாக 3 மாதத்தில் விடவேண்டிய டெண்டரை குறுகிய காலத்தில் 12 சதவிகித கமிஷனுக்காக (ரூ.160 கோடி ரூபாய்) அவசர அவசரமாக டெண்டருக்கு விட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகளே குற்றம்சாட்டுகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதிமுக ஆட்சியில் விடப்பட்ட கடைசி மூன்றுமாத டெண்டர்கள் ஆராயப்படும் என ஏற்கெனவே மு.க.ஸ்டாலின் எச்சரித்து இருந்தார். 

ஆனால் தேர்தலுக்கு முன்பே சென்னை மாநகராட்சி மீது மு.க.ஸ்டாலின் பார்வை விழுந்து இருக்கிறது. சென்னை மாநகராட்சியில் மிக நீண்டகாலமாக ஆதிக்கம் செலுத்தும் தலைமை பொறியாளர் நந்தகுமார் மீது திமுகவின் ஒட்டு மொத்தப்பார்வையும் குவிந்து இருக்கிறது. அவசர அவசரமாக ரூ 3 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இந்த டெண்டர் விடப்பட்டுள்ளது. அதிலும் சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.1000 கோடி ஒதுக்கப்பட வேண்டும் என்கிறார்கள். ஆனால் கொரோனாவால் நஷ்டத்தில் இயங்கி வருகிறது சென்னை மாநகராட்சி. நஷ்டத்தில் இருக்கும்போதே அவசர அவசரமாக ரூ. 1000 கோடியை மாநகராட்சியால் எப்படி செலுத்த முடியும். ஆகவே இந்த டெண்டர் முறையானதல்ல’’என்கிறார்.

பெருநகராட்சி ஊழியர்களிடம் இதுகுறித்து விசாரித்தோம். ‘’அமைச்சர் வேலுமணி தரப்புக்கு ஆல் இன் ஆலாக இருக்கும் நந்தகுமார், எஸ்.பி.வேலுமணியின் உடன் பிறந்த அண்ணன் அன்பரசனை கையில் வைத்துக் கொண்டு ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி வருவதாகவும், உள்ளாட்சி துறையிலும், சென்னை மாநகராட்சியிலும் வசூலாகும் கோடிகளை வசூல் செய்யும் ஏஜெண்டாக இருக்கிறார்.

 

நந்தகுமாரை பற்றிய புகார்கள் பல முறை வந்துள்ளன. சென்னை மாநகராட்சியில் ரூ.1500 கோடி ஊழல் என மக்கள் செய்தி மையம் மாநகராட்சியை சுற்றிலும் வால்போஸ்டர்கள் அடித்து அம்பலப்படுத்தியது. இப்படி நந்தகுமாரை பற்றிய ஏகப்பட்ட புகார்கள் தேர்தலுக்கு முன்பே அறிவாலயத்தை எட்டியிருக்கிறது. சென்னை மாநகராட்சியில் தலைமை பொறியாளர் புகழேந்தி, அமைச்சர் தரப்புக்கு பணிந்து செல்லவில்லை என்பதால்தான் மாற்றப்பட்டார். அதைத் திட்டமிட்டு செய்து தன் வசூல் வேட்டையில் தடையேதும் இல்லாமல் பார்த்துக் கொண்டது நந்தகுமார். தமிழக விவசாயிகள், தொழிலாளர்கள் கட்சியின் தலைவர் பொன்குமார், சென்னை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட சென்னை மாநகருக்குள்ளேயே ஒரு தொகுதியை எதிர்பார்த்தார். நந்தகுமாரின் மைத்துனர் இந்த பொன்குமார் என்பதால் அவரின் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டாராம் மு.க.ஸ்டாலின். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் டார்கெட் இந்த நந்தகுமார் மீது தான். 

ஆனால், நந்தகுமாரோ யார் ஆட்சிக்கு வந்தாலும் நான் தான் இந்த பதவியில் இருப்பேன் என்று கூறி வருகிறாராம். அதிமுக ஆட்சிக்கு வந்தால் எஸ்.பி.வேலுமணியின் அண்ணன் அன்பரசனை வைத்து பதவியை தக்க வைத்து கொள்வது. திமுக ஆட்சிக்கு வந்தால் மைத்துனர் பொன் குமாரை வைத்து பதவியை தக்க வைத்துக் கொண்டு வேலுமணிக்கு எதிராக ஆப்ரூவராகி மு.க.ஸ்டாலிடம் சரண்டராவது என்கிற திட்டத்தில் இருந்தார். ஆனால், தற்போது திமுக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து விட்டது. அதற்காக விடப்பட்ட டெண்டர் பணத்தின் கமிஷனை வசூலிக்காமல் இருக்கிறார் நந்தகுமார். அந்த ரூ. 3000 கோடிக்கான கமிஷனான ரூ 160 கோடியை திமுக ஆட்சிக்கு வந்தால் வசூல் செய்து திமுகவிடம் கொடுத்து விட்டு சரண்டராகி விடுவேன்’’எனக் கூறி வந்தார்.

நந்தகுமாரின் சகோதரி கணவர் கட்டட தொழில் சங்கத் தலைவர் பொன்.குமார். ஒருகாலத்தில் திமுகவில் கொடிகட்டிப்பறந்தவர் கடந்த சில மாதங்களாக ஓரம் கட்டப்படார். தற்போது திமுகவில் தனக்கிருக்கும் சிறிது தொடர்புகளை வைத்து பொன் குமார் மூலம் திமுகவில் நந்தகுமார் சரணடையமுடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. அது எடுபடாமல் போனால் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வாக்குமூலம் கொடுக்கவும் தயாராகிக் கொண்டுள்ளார். ஒருவேளை திமுக கைவிட்டால் என்ன செய்வது என்பதை உணர்ந்த அவர், ஒரு மாதத்திற்கு முன்பே தன்னுடைய காந்திநகர் வீட்டில் உட்கார்ந்து கொண்டு கோப்புகளை ழைத்து விட்டார். அவரது செயல் அலுவலகத்தில் பணிபுரியும் 15 பேரை அழைத்துக் கொண்டு அவரது வீட்டில் நிழல் அலுவலகம் நடத்தினார். அப்போது ஊழல் கோப்புகளை அழைக்கும் பணிகளை அங்கிருந்து செய்தனர்’’ என அதிர்ச்சி தகவல்களை கூறுகிறனர் சென்னை பெருநகராட்சி ஊழியர்கள்.

சென்னை பெருநகராட்சியின் மற்றொரு ஒப்பந்தகாரர் இதுகுறித்து கூறுகையில், ‘’அறப்போர் இயக்கம் கொடுத்த ஊழல்களிலேயே முக்கியமானது, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் 2000 கோடி ரூபாய் அளவில் சாலை அமைத்ததில் முறைகேடு நடைபெற்றுள்ளது என்ற புகார்தான். அந்த புகாரில் தலைமை பொறியாளர் நந்தகுமார் பெயர் முக்கிய நபராக சேர்க்கப்பட்டது. இந்தப்புகாரை விசாரிக்க மாநகராட்சி ஆணையர் குமரவேல் பாண்டியன் நியமக்கப்பட்டார். தற்போதைய கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் ஐஏஎஸ், கடந்தாண்டு செப்டம்பர் மாதத்திற்கு முன்பாக சென்னை மாநகராட்சியில் பணியாற்றிய போது, 2000 கோடி ஊழல் புகாரை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்வதற்காக தனது கீழே பணியாற்றிய காளிமுத்து, விஜயகுமார், ராஜேந்திரன், மகேசன்  உள்ளிட்ட அதிகாரிகளை விசாரணை அதிகாரியாக நியமித்திருக்கிறார்.

அடுத்து குமரவேல் பாண்டியன் கோவை மாநகராட்சிக்கு மாற்றப்பட விசாரணை அதிகாரிகளான அந்த மூவரிடமும் ஃபைலை க்ளோஸ் செய்யுங்கள் என அழுத்தம் வரவே விஜயகுமாரும், ராஜேந்திரனும் உடல்நிலை சரியில்லை எனக்கூறி விடுப்பில் சென்று விட்டனர்.  காளிமுத்துவுக்கு அழுத்தம் கொடுத்தும் அவர் அசைந்து கொடுக்கவில்லை. 

அடுத்து சென்னை மாநகராட்சிப் பணிகள் துணை ஆணையர் மேகநாத் ரெட்டி ஐஏஎஸ் தலைமையில் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. கடந்த 5 மாதங்களாக கிடப்பில் இருந்த அந்த கோப்பைதான் தூசு தட்டி எடுத்து, 2000 கோடி ரூபாய் ஊழல் புகாரில் தலைமை பொறியாளர் நந்தகுமார் ஆகியோருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்று எழுதி, அந்த கோப்பையே முடிக்கச் சொல்லி நெருக்கடி கொடுக்கிறார்கள். மேகநாத ரெட்டி ஐஏஎஸ், மாநகராட்சி அதிகாரி காளிமுத்து உள்ளிட்ட விசாரணை அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுத்தும் அவர்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. 

இந்த நேரத்தில் விசாரணை குழுவில் இடம் பெற்றுள்ள அதிகாரி காளிமுத்து, கொரோனோ தொற்று பாதிப்பால் வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனைக்ககே கோப்பை அனுப்பி காளிமுத்துவிடம் கையெழுத்து வாங்கி வரும்படி மேகநாத ரெட்டி ஐஏஎஸ்.ஸுக்கு நெருக்கடி கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் சம்மதிக்கவில்லை இந்த நிலையில் திமுக ஆட்சிக்கட்டிலுக்கு வந்துவிட்டது. இப்போது இந்த விவகாரத்தை முதலில் கையிலெடுக்க இருக்கிறார் ஸ்டாலின் என்கிறார். ஸ்டாலினை வளைத்துப்போட்டு சிக்கலில் இருந்து மீள்வாரா? இல்லை நந்தகுமார் நொந்தகுமாராவா? என்பது விரைவில் தெரிந்துவிடும்’’ என்கிறார்கள்.

click me!