வன்னியர் சமூகத்தை வைத்து மாறி மாறி கூட்டணி.. பாமகவுக்கு முற்றுப்புள்ளி.. ராமதாசை கழுவி ஊற்றிய தி.வேல்முருகன்.

By Ezhilarasan BabuFirst Published May 3, 2021, 3:19 PM IST
Highlights

பாஜகவின் வெற்றி தமிழகத்தில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை எனவும், வன்னியர்களுக்கு வழங்கிய 10.5% இட ஒதுக்கீடு தான் அதிமுக தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம் என்றும் வேல்முருகன் தெரிவித்தார்.

வன்னியர் சமூகத்தை வைத்து மாறி மாறி பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைத்த பாமகவிற்கு இந்த தேர்தலில் மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் எனவும், 

10.5 சதவீத  இட‌ஒதுக்கீடு அதிமுகவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது எனவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணி சார்பில் பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் ஆழ்வார்பேட்டையில் உள்ள திமுக தலைவர் ஸ்டாலின் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 

பாஜகவின் வெற்றி தமிழகத்தில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை எனவும், வன்னியர்களுக்கு வழங்கிய 10.5% இட ஒதுக்கீடு தான் அதிமுக தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம் என்றும் வேல்முருகன் தெரிவித்தார். மேலும், வன்னியர் சமூகத்தை வைத்து மாறி மாறி பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து பாமகவிற்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் என்று கூறினார். எடப்பாடி பழனிச்சாமிக்கு மக்களால் பெரிய சவுக்கடி கொடுக்கப்பட்டுள்ளது எனவும், திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான இந்த மதசார்பற்ற கூட்டணியின் தலைவர் மு க ஸ்டாலின் முதலமைச்சர் பொறுப்பை ஏற்கும் நிலையில் தமிழ் சமூகத்தின் உரிமைகள் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் என்றார்.

 

திமுகாவால் மக்களின் உரிமைகள் மீட்டெடுக்கப்படும் என்றார். தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் திமுகவிற்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தந்த அனைத்து தமிழக மக்களுக்கும் நன்றி எனவும் அந்தத் தொகுதியில் தன்னை வெற்றி பெறச் செய்த வாக்காள பெருமக்களுக்கு மனமார்ந்த நன்றியை தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துக்கொண்டார்.
 

click me!