தமிழக 16 சட்டப்பேரவையின் முதல் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. புதிய எம்ஏல்ஏக்கள் பதிவியேற்று வருகினறனர்.

By Ezhilarasan BabuFirst Published May 11, 2021, 10:58 AM IST
Highlights

தமிழகத்தின் 16 சட்டப்பேரவையின் முதல் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள  எம்எல்ஏக்கள் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்று வருகின்றனர். 

தமிழகத்தின் 16 சட்டப்பேரவையின் முதல் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள  எம்எல்ஏக்கள் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்று வருகின்றனர். முதலமைச்சர் மு .க ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார், அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் சட்டசபை உறுப்பினராக பணியாற்றி வருகின்றனர். 

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. முதலமைச்சராக மு.க ஸ்டாலின் ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்களும் அன்றே பதவிபிரமாணம் எடுத்துக் கொண்டனர். இந்நிலையில்  தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று கலைவாணர் அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில்  ஒருவர் பின் ஒருவராக எம்எல்ஏக்கள் பதவி ஏற்று வருகின்றனர். 

அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க எனவே தற்காலிக சபாநாயகராக திமுகவைச் சேர்ந்த கீழ்பெண்ணாத்தூர் தொகுதி எம்எல்ஏ கு.பிச்சாண்டியை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமித்தார். இந்நிலையில் கு.பிச்சாண்டி முன்னிலையில் புதிய எம்எல்ஏக்கள் பதவி ஏற்று வருகின்றனர்.அதில் முதலமைச்சர் மு .க ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் சட்டசபை உறுப்பினராக பதவியேற்று வருகின்றனர். அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், தா.மோ அன்பரசன் ஆகியோர் எம்எல்ஏவாக பதவி ஏற்றனர். ஒருவர் பின் ஒருவராக சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து பதிவி பிரமாணம் எடுத்து வருகின்றனர். 
 

click me!