ராதாகிருஷ்ணனை மாற்றாததில் திருப்தி.. சென்னை உயர்நீதிமன்ற குட்புக்கில் இடம்பெற்ற ஸ்டாலின்..!

Published : May 11, 2021, 10:04 AM IST
ராதாகிருஷ்ணனை மாற்றாததில் திருப்தி.. சென்னை உயர்நீதிமன்ற குட்புக்கில் இடம்பெற்ற ஸ்டாலின்..!

சுருக்கம்

தமிழகத்தில் பல ஐஏஎஸ்,  ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டு வரும் நிலையில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மாற்றப்படாதது திருப்தி என்று  தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி அமர்வு கருத்து தெரிவித்துள்ளது. 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் சிகிச்சை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு இன்று மதியம் விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கை தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் உச்சநீதிமன்றம் அமைத்த குழு பரிந்துரை அளிக்கும் வரை மத்திய அரசு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

அப்போது தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள தமிழக அரசு பல்வேறு துறைகளில் அதிகாரிகளை மாற்றம் செய்து வருகிறது. தலைமை செயலாளர் முதல் பல்வேறு துறைகளில் மாற்றம் செய்து வந்தாலும் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது என்பதை சுட்டிக்காட்டி சுகாதாரத்துறை செயலாளரை மாற்றாமல், அதே நிலையில் வைத்திருப்பது தொடர்பாக நீதிமன்றம் ஒரு திருப்தியான தகவலை தெரிவித்திருக்கிறது.

இதன் மூலம் கொரோனா பரவலை ஒரு வருடத்திற்கு மேலாக தொடர்ந்து கண்காணித்து வருகின்ற சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மாற்றப்படவிலை என்பதை கருத்தில் கொண்ட நீதிமன்றம் இதுதொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் தமிழக அரசு அவரை வைத்தே மேற்கொண்டு பணிகளை தொடர்ந்து வருவதற்கு திருப்தியை அளிக்கும் வகையில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?