சென்னை மக்களே, ஊரடங்கு குறித்து எந்த சந்தேகமாக இருந்தாலும் இந்த எண்ணிற்கு அழையுங்கள். போலீஸ் சூப்பர் பிளான்.

By Ezhilarasan BabuFirst Published May 11, 2021, 9:56 AM IST
Highlights

முழு ஊரடங்கு குறித்த எவ்வித சந்தேகங்கள் ஏற்பட்டாலும், குறிப்பாக இ-பாஸ் எதற்கெல்லாம் பயன்படும் என்ற கேள்விகள் எழுந்தால் காவல்துறை உதவி மையத்தை அனுகலாம் என தெரிவித்துள்ளனர். 

ஊரடங்கு காலங்களில் பொதுமக்களின் உதவிக்கென சென்னை காவல்துறை சார்பில் 24 மணி நேர உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நேற்று காலை 4 மணி முதல் வருகிற 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கானது அறிவிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. கொரோனா நோய் தொற்றை முழுமையாக ஒழிக்கும் பொருட்டு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களின் உதவிக்காக சென்னை காவல்துறையினர் பிரேத்யேகமாக 24 மணி நேரமும் செயல்படும் வகையில் உதவிமையம் ஒன்றை தொடங்கி உள்ளனர். 

முழு ஊரடங்கு குறித்த எவ்வித சந்தேகங்கள் ஏற்பட்டாலும், குறிப்பாக இ-பாஸ் எதற்கெல்லாம் பயன்படும் என்ற கேள்விகள் எழுந்தால் காவல்துறை உதவி மையத்தை அனுகலாம் என தெரிவித்துள்ளனர். இதுமட்டுமின்றி மூத்த குடிமக்கள், ஆதரவின்றி தனியாக இருக்கக்கூடிய பெண்கள் உதவிக்காகவும், ஆக்ஸிஜனை மருத்துவமனைக்கு தடையில்லாமல் கொண்டு செல்ல பாதுகாப்பு குறித்தும், கோவிட் மையங்கள் குறித்தும், அத்தியாவசிய தேவைகள், ரெம்டெசிவிர் மருந்து விற்பனை குறித்த தகவலுக்காக உதவி மையத்தை அனுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த உதவி மையமானது நவீன கட்டுப்பாட்டு அறையின்  உதவி ஆணையர் தலைமையிலான காவலர் குழு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுவார்கள் என சென்னை காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உதவி மையத்தை அனுக 94981 81236 மற்றும் 94981 81239 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் எனவும் சென்னை காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
 

click me!