கொரோனா தொற்றால் இறந்தவர் உடல்முதன் முதலாக பிரேத பரிசோதனை.. அதிர்ச்சி தகவல்களை வெளியிட்ட டாக்டர் தினேஷ்ராவ்..!

By T BalamurukanFirst Published Oct 25, 2020, 9:49 AM IST
Highlights

கொரோனா பாதித்து உயிரிழந்த நோயாளிகளின் உடல்களை புதைக்க விடாமல் கல்லைக்கொண்டு எறிந்தும், மக்கள் போராட்டம் நடத்தியதையும், மிகுந்த பீதியில் இருந்த சம்பவங்கள் எல்லாம் அரங்கேறியதை மறக்க முடியாது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு இறந்தவர் என்றால் ஊரை விட்டு ஓடிப்போனவர்கள் தான் அதிகம். ஆனாலும் ஒரு மருத்துவர் மட்டும் கொரோனா தொற்றால் இறந்தவர் உடலை பிரேத பரிசோதனை செய்து அப்படி என்ன தான் அந்த உடலில் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது என்று ஆய்வு முதன் முதலாக ஆய்வு செய்திருக்கிறார் தைரியமாக..
 

கொரோனா பாதித்து உயிரிழந்த நோயாளிகளின் உடல்களை புதைக்க விடாமல் கல்லைக்கொண்டு எறிந்தும், மக்கள் போராட்டம் நடத்தியதையும், மிகுந்த பீதியில் இருந்த சம்பவங்கள் எல்லாம் அரங்கேறியதை மறக்க முடியாது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு இறந்தவர் என்றால் ஊரை விட்டு ஓடிப்போனவர்கள் தான் அதிகம். ஆனாலும் ஒரு மருத்துவர் மட்டும் கொரோனா தொற்றால் இறந்தவர் உடலை பிரேத பரிசோதனை செய்து அப்படி என்ன தான் அந்த உடலில் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது என்று ஆய்வு முதன் முதலாக ஆய்வு செய்திருக்கிறார் தைரியமாக..

அப்படி ஆய்வு செய்தவருக்கு காத்திருந்தது அதிர்ச்சியான தகவல்களை கண்டுபிடித்துள்ளார் தடயவியல் துறை நிபுணர் டாக்டர் தினேஷ்ராவ்.
'ஆக்ஸ்ஃபோர்டு மருத்துவக் கல்லூரியில் தடயவியல் மருத்துவம் பயின்றவர் டாக்டர் தினேஷ்ராவ்.கொரோனா பாதித்து உயிரிழந்த 60 வயது முதியவரின் உடலை பிரேத பரிசோதனை செய்தார். இதுவரை கொரோனா பாதித்தவர்களின் உடல்களை பாதுகாப்பான பைகளில் போட்டு கூடுமான அளவுக்கு விரைவாக நல்லடக்கம் செய்து வந்த நிலையில், கொரோனா தொற்று ஒரு மனிதனின் உடலில் என்னவெல்லாம் செய்கிறது என்பதை கண்டறியும் வகையில் பிரேதபரிசோதனை செய்து, பல அதிர்ச்சிகரமான தகவலை கண்டறிந்துள்ளார். 

 இவர் தனியொருவனாக செய்த பிரேதபரிசோதனையில் தெரியவந்திருக்கும் பல முக்கிய விஷயங்கள் அதிர்ச்சியனதாகவும் ஆச்சரிமிக்கதாகவும் இருந்ததாம். உயிரிழந்த கொரோனா நோயாளியின் கழுத்து, முகம், தோல் பகுதிகளில் கொரோனா தொற்று இல்லை. அவ்வளவு ஏன், அவர்களது உள்ளுறுப்புகளில் கூட நுரையீரல், மூச்சுக்குழாய் பகுதிகளில் கூட கொரோனா தொற்று இல்லை. இப்பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் எங்குமே கொரோனா தொற்று இல்லை என்பது தெரிய வந்துள்ளது.ஆனால், ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில் அந்த நபரின் மூக்கு மற்றும் தொண்டைப் பகுதிகளில் கொரோனா வைரஸ் பதுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஒரு மனிதனின் நுரையீரல் என்பது, பஞ்சால் ஆன பந்து போல மென்மையாகக் காணப்படுவது வழக்கம், ஆனால், அந்த நபரின் நுரையீரல் தோலால் செய்யப்பட்ட பந்து போல கனமாக இருந்துள்ளது.நுரையீரல் வழக்கமாக 600 - 700 கிராம்தான் இருக்கும், ஆனால் கொரோனா நோயாளியின் நுரையீரல் மட்டும் 2.1 கிலோ இருந்தது. தொடும் போது மென்மையாக இருக்கவில்லை, மிகக் கடினமாக இருந்தது, ஆங்காங்கே ரத்தத் திட்டுக்கள் காணப்பட்டன. அதைப் பார்க்கும் போது, கொரோனா வைஸ் இந்த நுரையீரலை அப்படி என்னதான் செய்திருக்கும்? என்று நினைக்கும் போது அதிர்ச்சியாக இருந்தது என்கிறார் ராவ்.


 கொரோனா வைரஸ் என்பது, உலகத்தின் பிற நாடுகளில் இருப்பதைப் போல அல்லாமல் இந்தியாவில் வேறு வகையில் மக்களை பாதிக்கிறது. அதாவது, அதன் பாதிப்பு இந்திய மக்களிடையே வேறுமாதிரியாக உள்ளது, அது நுரையீரலை தாக்குவது இத்தாலி அல்லது உலகின் வேறு நாடுகளில் காணப்படுவதைப் போல் அல்லாமல் வேறுபட்டு உள்ளது.கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்கள் தொடுவதற்கு அனுமதிக்கலாமா.? என்றால்  இறந்த நபரின் உடலில் கொரோனா வைரஸ் இறந்துவிட்டதைப் போலக் காணப்பட்டாலும், இறந்தவரின் உடலிலிருந்து பாக்டீரியா தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.
 

click me!