பதவிக்காக பவர்புல் கோவில்களுக்கு படையெடுக்கும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன்.!

By T Balamurukan  |  First Published Oct 24, 2020, 11:10 PM IST

இராமநாதபுரம் சட்டமன்றம் தொகுதி எம்எல்ஏ மணிகண்டன். இவர் ஜெயலலிதா அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருந்தவர். எடப்பாடி முதல்வராக பதவியேற்ற பிறகு அவரது அமைச்சரவையில் இருந்து பதவிநீக்கம் செய்யப்பட்ட முதல் அமைச்சர் என்கிற பட்டியலில் இடம் பெற்றவர்தான் மணிகண்டன். 
 


இராமநாதபுரம் சட்டமன்றம் தொகுதி எம்எல்ஏ மணிகண்டன். இவர் ஜெயலலிதா அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருந்தவர். எடப்பாடி முதல்வராக பதவியேற்ற பிறகு அவரது அமைச்சரவையில் இருந்து பதவிநீக்கம் செய்யப்பட்ட முதல் அமைச்சர் என்கிற பட்டியலில் இடம் பெற்றவர்தான் மணிகண்டன். 

இராமநாதபுரம் மாவட்டத்தில் கட்சி நிர்வாகிகளை தரக்குறைவான வார்த்தைகளால் அர்ச்சனை செய்வதும் அதிகாரிகளை விரட்டுவதுமாக இருந்தார் என்பதும் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர்ராஜாவுக்கும் இவருக்கும் நீயா நானா என்கிற போட்டி உச்சகட்டத்தை எட்டியது. இது ஒருபக்கம் இருந்தாலும்.. அரசு கேபிள் டிவி சேர்மன் உடுமலைப்பேட்டை ராதாகிருஷ்ணனுக்கும் இவருக்கும் மோதல் ஏற்பட அந்த மோதல் இவரது பதவியை பறிக்கும் அளவிற்கு போய்விட்டது. எடப்பாடியின் பவர் சென்டர்களில் ஒருவரான உடுமலை ராதாகிருஷ்ணனிடம் மணிகண்டன் மோதினால் சும்மா விடுவார்களா? அதன் பதவியை பறித்துவிட்டார்கள்.

Latest Videos

தனக்கு மீண்டும் அமைச்சர் பதவி கிடைக்க வேண்டும் என்று கோவில் கோவிலாக சுற்றி வலம் வருகிறார் மணிகண்டன்.மதுரையில் அமைந்துள்ள யோக நரசிம்மர் கோவில் திருமோகூர் காளமேகப்பெருமாள் மற்றும் எதிரிகளை அழித்து பதவி வழங்ககூடிய வல்லமை படைத்த சக்கரத்தாழ்வார் போன்ற திருத்தலங்களுக்கு படையெடுத்திருக்கிறார் மணிகண்டன்.சனிக்கிழமை நாளன்று மதுரை மற்றும் மதுரையை சுற்றியுள்ள மாவட்டங்களில் இருக்கும் அரசியல் பிரமுகர்கள் தொழிலதிபர்கள் காலையில் இருந்து இரவு 8மணி வரைக்கும் தரிசனம் செய்ய வந்து வருகிறார்கள். மணிகண்டனுக்கு திமுக பக்கம் இருந்து தூதுபோய் கொண்டிருக்கிறது. பதவியிழந்து சோகத்தில் இருக்கும் மணிகண்டன் மதில்மேல் பூனையாக இருக்கிறார் என்பது மட்டும் உண்மை என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

click me!