வெளியானது அதிமுக கூட்டணியின் இறுதிப்பட்டியல்... எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா..?

By Thiraviaraj RMFirst Published Feb 20, 2019, 11:53 AM IST
Highlights

மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி சேரும் கட்சிகளும், தொகுதி எண்ணிக்கையும் கிட்டத்தட்ட உறுதியான நிலையில் இன்றைக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருப்பதாக அதிமுக தரப்பினர் கூறுகின்றனர். 

மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி சேரும் கட்சிகளும், தொகுதி எண்ணிக்கையும் கிட்டத்தட்ட உறுதியான நிலையில் இன்றைக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருப்பதாக அதிமுக தரப்பினர் கூறுகின்றனர். 

மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க நேற்று காலை பாமக ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன்படி பாமகவுக்கு ஒன்பது தொகுதிகளும், 1 ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கப்பட்டது. எந்தெந்த தொகுதிகள் என அறிவிக்கப்படபில்லை. இதனையடுத்து சென்னை வந்த பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் அதிமுக தலைவர்களுடன் தொகுதிப்பங்கீடு குறித்து கிரண் பிளாஸா ஹோட்டலில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 

பின்னர் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு சென்ற பியூஸ்கோயல் தொகுதிப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. நேற்றே தேமுதிகவுக்கு எத்தனை சீட்டுகள் என அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இன்றைக்குள் அதிமுகவுடன் கூட்டணி சேரும் கட்சிகளும், அவர்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதி எண்ணிக்கைகளும் வெளியாக இருக்கிறது. அதன்படி ஏற்கெனவே பாமகவுக்கு 7, பாஜகவுக்கு 5 சீட்டுகள் ஒதுக்கப்பட்டது. 

இந்நிலையில், அதிமுகவுக்கு 20 தொகுதிகளும், தேமுதிகவு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட உள்ளது. அடுத்து ஏ.சி.சண்முகம், பச்சமுத்து, என்.ஆர்.காங்கிரஸ் ஆகியோருக்கு தலா ஒரு தொகுதிகளும் ஒதுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. புதியதமிழகம் கிருஷ்ணசாமிக்கு அதிமுக உள் ஒதுக்கீடாக ஒரு தொகுதியை வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று இரவுக்குள் வெளியாக உள்ளதாக அதிமுக தரப்பினர் கூறுகின்றனர். 

click me!