கண் திருஷ்டியாலதான் முக்கொம்பு அணையின் மதகுகள் உடைஞ்சு போச்சு… இப்படி சொன்னது யார் தெரியுமா ?

Published : Sep 03, 2018, 01:07 AM ISTUpdated : Sep 09, 2018, 08:10 PM IST
கண் திருஷ்டியாலதான் முக்கொம்பு அணையின் மதகுகள் உடைஞ்சு போச்சு… இப்படி சொன்னது யார் தெரியுமா ?

சுருக்கம்

ஜெயலலிதா மறைந்த பிறகு பல பிரச்சனைகளை சமாளித்து மிகச் சிறப்பாக ஆட்சி செய்து வரும் எடப்பாடி பழனிசாமி அரசு மீது பட்ட கண் திருஷ்டியால் தான் முக்கொம்பு அணையின் மதகுகள் உடைந்து போனதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக உண்மைக்கு மாறாக எதிர்க்கட்சியினர் புகார் கூறி வருகின்றனர் என தெரிவித்தார்.

டி.டி.வி.தினகரன் குறித்து மன்னார்குடியில் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் பேசியது குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஆம்.பி.உதயகுமார், . உண்மையும், ஆதாரமும் இல்லாமல் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எதையும் கூற மாட்டார் என கூறினார்.

ஊழல் புகாரினை சட்ட ரீதியாக எதிர்கொண்டு அமைச்சர் விஜயபாஸ்கர் அதில் இருந்து மீண்டு வருவார் என்றும், அவரை பதவி விலகச் சொல்பவர்கள் முன் உதாரணமாக இருந்துள்ளார்களா? என நினைத்து பார்க்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்..

ரஜினி உள்ளிட்டோர் மக்களின் நாடித்துடிப்பை பார்த்து அரசியலுக்கு வர வேண்டும். நாடி ஜோசியம் பார்க்கக்கூடாது என்றும், தினகரன் தனது நலனை முன்னிலைப்படுத்தியே செயல்படுகிறார். மக்கள் நலனில் அவர் அக்கறை கொள்ளவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்..

அ.தி.மு.க.வுக்கு எதிரி தி.மு.க.வும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் தான் என்றும், . ஜெயலலிதா மறைந்த பிறகு பல பிரச்சனைகளை சமாளித்து மிகச் சிறப்பாக ஆட்சி செய்து வரும் எடப்பாடி பழனிசாமி அரசு மீது பட்ட கண் திருஷ்டியால் தான் முக்கொம்பு அணையின் மதகுகள் உடைந்து போனதாகவும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

வெண்டிலேட்டரில் இருக்கும் காங்கிரஸுக்கும் இந்தியா கூட்டணிக்கும் தொடர்பில்லை: உமர் அப்துல்லா அதிரடி
அமித்ஷாவுடன் பேசியது என்ன? பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டி? நயினார் நாகேந்திரன் விளக்கம்!