ஐபிஎஸ் அதிகாரிகளின் மொத்த ஃபைலும் அண்ணாமலையிடம் இருக்கு... எச்சரிக்கும் கராத்தே தியாகராஜன்..!

By Thiraviaraj RMFirst Published Nov 29, 2021, 1:36 PM IST
Highlights

 உங்களுக்கு பென்சனும் கிடைக்காது, ப்ரோமோசனும் கிடைக்காது. நீங்க நினைச்ச மாதிரி ரவுடியிசம் பண்ண முடியாது, எங்க கட்சிலயே நிறைய பேர் இருக்காங்க. 

"தமிழகத்தில் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகளே உங்களுடைய மொத்த ஃபைலும் பாஜக தலைவர் அண்ணாமலை இடம் உள்ளது'' என பாஜகவை சேர்ந்த கராத்தே தியாகராஜன் எச்சரித்துள்ளார்.

சென்னையில் நடந்த பாஜக கூட்டத்தில் பேசிய அவர், ‘’தமிழகத்தில் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகளே உங்களுடைய மொத்த ஃபைலும் பாஜக தலைவர் அண்ணாமலை இடம் உள்ளது. டிசி, அடிஷனல், உங்களுக்கு பென்சனும் கிடைக்காது, ப்ரோமோசனும் கிடைக்காது. நீங்க நினைச்ச மாதிரி ரவுடியிசம் பண்ண முடியாது, எங்க கட்சிலயே நிறைய பேர் இருக்காங்க. அகிலன் நம்ம கட்சியில இருக்கிறார். கானா பாலாவோட சொந்த அண்ணன் அவர். அவர் பார்க்காத ரவுடி இல்லை. இன்றைக்கு விடுதலை சிறுத்தைகளை சென்னையில் வளர்த்தவர் யார் என்றால் அகிலன். நாங்க எல்லாத்துக்கும் தயாராக இருக்கிறோம்.

தமிழகத்தில் மகன், மருமகன் ஆட்சி நடக்கிறது. கட்சியில் உண்மையாக உழைத்து கொண்டிருப்போருக்கு எந்த ஒரு அங்கீகாரமும் கொடுப்பதில்லை. தமிழக அரசு மக்களை ஏமாற்றி, எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை கூறுகிறது. மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.

தி.மு.க., தேர்தல் வாக்குறுதியான பெட்ரோல், டீசல் விலையை உடனே குறைக்க வேண்டும். தேசிய தலைவர் நட்டாவை குறை கூற தி.மு.க.,வுக்கு எந்த தகுதியும் இல்லை. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ., தயாராக உள்ளது'’ என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகளே உங்களுடைய மொத்த ஃபைலும் பாஜக தலைவர் அண்ணாமலை இடம் உள்ளது

உங்களுக்கு பென்சனும் கிடைக்காது, ப்ரோமோசனும் கிடைக்காது

"நீங்க நினைச்ச மாதிரி ரவுடியிசம் பண்ண முடியாது, எங்க கட்சிலயே நிறைய பேர் இருக்காங்க" - கராத்தே தியாகராஜன் pic.twitter.com/FdeAp3psmV

— Imcool Rafi (@imcoolrafi)

 

கராத்தே தியாகராஜனின் இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதென்ன முட்டாள்தனம். எங்கள் காதுகளில் பூ வைக்கல. IPS officers எந்த மாகாணத்தில் வேலை பார்க்கிறார்களோ அந்த மாகாணம் தான் disciplinary authority. ஒன்றிய அரசு அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க முடியாது. அரசியல் கட்சி தலைவரா அவர்களின் ACR எழுத போகிறார்கள்? மொத்த file அவரிடம் உள்ளதா?'’ எனத் தெரிவித்து வருகின்றனர்.
 

click me!