சத்ரியனுடைய இலக்கணமே என்ன..? புஜத்தை தட்டி உயர்த்திக் கொண்டு... உசுப்பேற்றும் ராமதாஸ்..!

Published : Nov 29, 2021, 12:53 PM IST
சத்ரியனுடைய இலக்கணமே என்ன..? புஜத்தை தட்டி உயர்த்திக் கொண்டு... உசுப்பேற்றும் ராமதாஸ்..!

சுருக்கம்

சத்ரியனின் இலக்கணம் என்ன என்பது குறித்து பாடம் எடுத்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

சத்ரியனின் இலக்கணம் என்ன என்பது குறித்து பாடம் எடுத்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

2026 சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது அன்புமணியை முதல்வராக்கியே தீர வேண்டும் என ராமதாஸ் திட்டமிட்டு அதற்கு தகுந்த அளவில் தனது சமூகத்தினரிடையே உந்துதலை ஏற்படுத்தி வருகிறார். அதற்கு முன்னோட்டமாக நகர்புற உள்ளாட்சித் தேர்தலை கையெலெடுத்து அதிக வெற்றி வாய்ப்பை பெற நினைக்கிறது பாமக. 

அதற்காக ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசிய தகவல்கள் ஒவ்வொன்றாக வெளியேறி வருகிறது. ’’தனியாக நிற்க வேண்டாம். நம்மிடம் சக்தி இல்லை. சக்தியை இழந்து கிடக்கிறோம். ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி வைக்கலாம் என நீங்கள் வற்புறுத்தினீர்கள். 

இதனால் மாறி மாறி கட்சிகளுடன் கூட்டணி வைத்து 20 எம்எல்ஏக்கள், 25 எம்எல்ஏக்கள், 18 எம்எல்ஏக்கள், 6 எம்பிக்கள், 10 ஆண்டுகாலம் 2 மத்திய அமைச்சர்கள் என பாமகவின் செல்வாக்கு உயர்ந்தது. அப்போது தனியாக நிற்க வேண்டாம் என நாங்கள் சொன்னது சரிதான் என நீங்கள் சொன்னீர்கள். தற்போது நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் 23 தொகுதிகளில் போட்டியிட்டு 5 தொகுதிகளில் தான் வெற்றி பெற்றுள்ளோம்.

 

திமுகவுக்கும், காங்கிரஸுக்கும் உள்ளூர் புரிதலுக்கு விட்டுக் கொடுப்பது என திமுகவுக்கும், காங்கிரஸுக்கும் வேலை செய்து நம்முடைய கட்சிக்காரர்களே பாமகவுக்கு குழி பறித்தனர். இதனால் 2 தொகுதிகளை இழந்தோம். அந்த தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தால் கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கும். அந்த வியாதி உள்ளாட்சி தேர்தலிலும் தொடர்ந்தது. இது தொடராமல் தடுப்பதற்கு ஒரே வழி திண்ணை பிரச்சாரம். சமூக வலைதளம் ஆகியவற்றின் மூலம் பிரச்சாரம் செய்வதுதான். திண்ணை பிரச்சாரம் வரும் சட்டசபை தேர்தலில் பாமக ஆட்சி அமைக்க வேண்டும். அன்புமணிக்கு என்ன குறை உள்ளது, திறமையானவர். அவரது தலைமையில் பாமகவின் ஆட்சி அமைய வேண்டும். ஊர் ஊராகச் சென்று திண்ணை பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். 

60 எம்எல்ஏக்கள் அவர்கள் கொடுக்கும் உணவை அருந்தி அவர்கள் வீட்டில் படுத்து உறங்கி 100க்கு 40 சதவீத வாக்குகளை பெற்று 60 எம்எல்ஏக்களை பெற வேண்டும் என ராமதாஸ் தெரிவித்த கருத்துக்களெல்லாம் நாம் ஏற்கெனவே அறிந்தவை தான். 

இந்நிலையில் ராமதாஸ் பேசிய புதிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ‘’சத்ரியன் எப்படி இருக்க வேண்டும்?  சத்ரியனோட இலக்கணமே என்ன? புஜத்தை தூக்கி, தட்டிக்கொண்டு...  உயர்த்திக் கொண்டு... ம்ம்ம்.... ம்ம்ம்... ம்ம்ம்... வீராப்பு காட்ட வேண்டும். அவன் தான் சத்ரியன்’’ எனத் தெரிவித்துள்ளார். 

 


இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஒருவர், ‘’பிராமணன் தன் பெயரில் மேன்மையைக் குறிக்க 'சர்மா' என்றும், சத்ரியன் பலத்தைக் குறிக்க 'வர்மா' என்றும், வைசியன் செல்வத்தைக் குறிக்க 'பூபதி' என்றும், சூத்திரன் பணிவிடை செய்ய 'தாசன்' என்றும் பெயரிட வேண்டும்- மனுதர்மம்-அத்தியாயம்-2,சுலோகம்-32’’ எனக் கூறியுள்ளார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

புது ட்விஸ்ட்..! விஜய் கூட்டணிக்கு வருவார்..! எடப்பாடி பழனிசாமி போடும் பக்கா ரூட்..! ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக..!
ராஷ்ட்ரபதிபவன் விருந்தில் லெக் பீஸ் எங்கே.! கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.!