
ஆர்.கே. நகர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததில் சம்பந்தப்பட்டவர்கள் மீது முறைப்படி வழக்குப் பதிவு செய்த பின்னரே இடைத்தேர்தல்
நடத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், சென்னை, கொளத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
ஆர்.கே. நகர் சட்டமன்ற தொகுதியில் 40 ஆயிரம் போலி வாக்களர்களை நீக்க வேண்டும் என்றார்.
போலி வாக்காளர்கள் குறித்து ஆதாரத்துடன் மாநில தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எதும் இல்லை என்றார்.
ஆர்.கே. நகர் வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்தது தொடர்பாக முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிய வேண்டும்
என்று கூறினார்.
சம்பந்தப்பட்டவர்கள் மீது முறைப்படி வழக்கு பதிவு செய்த பின்னரே ஆர்.கே. நகர் இடைத் தேர்தலை நடத்த வேண்டும் என்றார்.
சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்றும் ஸ்டாலின் குற்றம்
சாட்டினார்.