
எடப்பாடி அணியினர், இரு அணிகளும் இணையும் விஷயத்தில் சொல்வது ஒன்று, செய்வது ஒன்றுமாக இருக்கிறார்கள்
என ஒ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த செம்மலை கூறினார்.
இதுகுற்த்து செய்தியளார்களிடம் செம்மலை கூறியதாவது:-
எடப்பாடி பழனிச்சாமி அணியை சேர்ந்தவர்கள், எங்களை அவமானப்படுத்துகிறார்கள். தீண்டத்தகாதவர்களிடம் இருப்பதை போல் நடந்து கொள்கிறார்கள்.
எடப்பாடி அணியில் இருப்பவர்கள், தனித்தனியாக பேட்டிக் கொடுத்து கொடுக்கிறார்கள். அதில், முரண்பாடான கருத்துக்களை வெளியிடுகிறார்கள். அவர்கள் நடந்து கொள்ளும் விதம் சரியானதாக இல்லை.
எடப்பாடி அணியில் நடக்கும் பல்வேறு குழப்பங்களை, நாங்கள் வேடிக்கை பார்த்து கொண்டே இருக்கிறோம். ஓபிஎஸ், தமிழகத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் அரசியல் மாற்றங்களை எல்லாம் உன்னிப்பாக கவனித்து கொண்டிருக்கிறார். எங்களது அணியை பொறுத்தவரை, நாங்கள் கொண்டுள்ள நிலைபாட்டில் உறுதியாக இருக்கிறோம்.
நாங்கள் எடப்பாடி அணியுடன் இணைய இருக்கின்றோம். சகோதர மனப்பான்மையோடு இருக்கின்றோம் என்று அவர்கள் சொல்கிறார்கள். ஆனால், நடைமுறையில் அவர்கள் அப்படி நடந்து கொள்ளவில்லை.
ஓபிஎஸ் ஆதரவாளர்களை ஒவ்வொரு நிலையிலும் அவர்கள் புறக்கணிக்கிறார்கள். அவமானப்படுத்துகிறார்கள். அவர்கள் வெளியில் ஒன்று சொல்வதும், செயல்களில் வேறு விதமாக இருக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.