அதிமுகவின் இரட்டை வேடம்... பொங்கியெழுந்த டி.டி.வி.தினகரன்..!

By Thiraviaraj RMFirst Published Jul 29, 2019, 5:26 PM IST
Highlights

முத்தலாக் மசோதாவில் அதிமுக மக்களவையில் ஒரு நிலைபாடும், மாநிலங்களவையில் ஒரு நிலைபாடும் எடுத்து இருப்பது அதிமுகவில் இரட்டை நிலைப்பாடை காட்டுவதாக அமமுக பொது செயலாளர் டி.டி.வி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். 

முத்தலாக் மசோதாவில் அதிமுக மக்களவையில் ஒரு நிலைபாடும், மாநிலங்களவையில் ஒரு நிலைபாடும் எடுத்து இருப்பது அதிமுகவில் இரட்டை நிலைப்பாடை காட்டுவதாக அமமுக பொது செயலாளர் டி.டி.வி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். 

மதுரையில் அமமுக பொது செயலாளர் டி.டி.வி தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் "தமிழகத்தில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு உள்ளதா? இல்லையா? என்பதை சிறுபான்மையினர் தான் சொல்ல வேண்டும். மத்திய அரசு சார்பில் தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு அனுப்பபடும் நிதிகள் திருப்பி அனுப்பி வைக்கப்படுவது தமிழக அரசின் கையாளகாத தனத்தை காட்டுகிறது. சிலை கடத்தல் தொடர்பாக அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பதை பொறுத்து இருந்து பார்போம். 

மத்திய அரசு தலைமையின் கீழ் இயங்கும் தேசிய புலனாய்வு முகமை நடுநிலையுடன் செயல்பட வேண்டும். அரசு தூண்டுதலில் செயல்படக்கூடாது. தமிழக அரசு சிறுபான்மையினருக்கு ஆதரவாக உள்ளதா? என்பதை தெரிவிக்க வேண்டும். வேலூர் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள், முத்தலாக் மசோதாவில் அதிமுக லோக்சபாவில் ஒரு நிலைபாடும், ராஜ்யசபாவில் ஒரு நிலைபாடும் எடுத்து இருப்பது அதிமுகவில் இரட்டை நிலைப்பாடை காட்டுகிறது" என கூறினார்.

click me!