சொன்ன வாக்கை காப்பாற்ற போராடும் திமுக அரசு.. கொரோனா நெருக்கடியிலும் டோக்கன் விநியோகம் தீவிரம்.

Published : Jun 02, 2021, 12:49 PM IST
சொன்ன வாக்கை காப்பாற்ற போராடும் திமுக அரசு.. கொரோனா நெருக்கடியிலும் டோக்கன் விநியோகம் தீவிரம்.

சுருக்கம்

தமிழகத்தில் உள்ள 2 கோடியே 11 லட்சத்து 12 ஆயிரத்து 798 குடும்ப அட்டைதாரா்களுக்கும் கிடைக்கச் செய்யும் வகையில் மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பாக வழங்கப்பட உள்ளது.  

மறைந்த திமுக தலைவர், முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ள 13 பொருட்களுக்கான டோக்கன்கள்  இரண்டாவது நாளாக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் 13 வகையான மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்புப் பையை, மலிவு விலையில் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. 

இந்தத் திட்டமானது வரும் 3-ஆம் தேதி தொடங்கப்பட்டு, 5-ஆம் தேதி முதல் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள 2 கோடியே 11 லட்சத்து 12 ஆயிரத்து 798 குடும்ப அட்டைதாரா்களுக்கும் கிடைக்கச் செய்யும் வகையில் மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பாக வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில் 5-ஆம் தேதி முதல் வழங்கப்படவுள்ள 13 பொருட்களுக்கான டோக்கன்கள் நேற்றும் இன்றும்  நியாய  கடை ஊழியர்கள் மூலம் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி இன்று சென்னை மயிலாப்பூரில் உள்ள சீனிவாசபுரம், சண்முகப்பிள்லை தெரு, மாதவ பெருமாள் கோவில் தெரு உள்ளிட்ட பகுதியில் வசிக்கும் 200க்கும் மேற்ப்பட்ட குடும்பங்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. இது போல பல்வேறு பகுதிகளில் டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. 
 

PREV
click me!

Recommended Stories

Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?
Government Subsidy: ரூ.1,00,000 மானியம் தரும் தமிழக அரசு.! எதுக்கு தெரியுமா? யாருக்கெல்லாம் கிடைக்க போகுது தெரியுமா?