குழந்தைகளை தாக்கக்கப்போகும் 3வது கொரோனா அலை... இப்போதே தயாராகும் மருத்துவமனைகள்..!

By Thiraviaraj RMFirst Published Jun 2, 2021, 12:43 PM IST
Highlights

3வது கொரோனா அலை குழந்தைகளை அதிகம் தாக்கும் என தகவல்கள் வெளியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
 

3வது கொரோனா அலை குழந்தைகளை அதிகம் தாக்கும் என தகவல்கள் வெளியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தற்போதைய காலகட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றனர். முன்பு போல அல்லாமல் தற்போது கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு அதிகமாகி இருப்பதால் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் அனைத்து தரப்பினருக்கும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. 18 வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசி போட அனுமதி கொடுக்கப்படாத நிலையில் கொரோனா 3வது அலை குழந்தைகளுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தலாம் என்பதே வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.

இந்நிலையில் குழந்தைகளை கொரோனா 3வது அலையில் இருந்து பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை டெல்லி அரசு தற்போதே தொடங்கியுள்ளது. இரண்டாவது அலை பரவலால் அதிகம் பாதிக்கப்பட்ட டெல்லி, இனி அதுபோன்ற நிலையை அடைந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக உள்ளது. மூன்றாவது அலையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைக்க டெல்லி அரசு ஒரு பணிக்குழுவை அமைத்துள்ளது.

டெல்லியில் பெரும்பாலான மருத்துவமனைகள் குழந்தைகளுக்கான மருந்துகள், படுக்கை வசதிகள், ஐசியூ படுக்கைகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தயார் செய்து வருகின்றன. டெல்லியின் ரோகினி பகுதியில் உள்ள சரோஜ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் தலைமை செயல் இயக்குனர் மருத்துவர் பரத்வாத் இது தொடர்பாக கூறுகையில், ’’கொரோனாவால் குழந்தைகள் பாதிக்கப்படும் சூழல் இருப்பதால் அதனை கையாளும் வகையிலான கட்டமைப்புகளை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளோம்.

கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தை ஒருவருடன் அவரது குடும்ப உறுப்பினர் அல்லது உதவியாளர் துணைக்கு இருப்பார்கள் என்பதால் அறையில் இரு படுக்கைகள் தனியாக தடுக்கப்பட்டு தொற்று பரவாமல் இருக்கும் வகையில் தயார் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

குழந்தைகளுக்கான ஐசியூ பிரிவு, பிறந்த குழந்தைகளுக்கான பிரிவு மற்றும் குழந்தைகள் சார்ந்த பிற மருத்துவ பிரிவுகளின் எண்ணிக்கையை மும்மடங்காக உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளோம். குழந்தைகளுக்கான ஆக்ஸிஜன் மாஸ்குகள், சிறப்பு வென்டிலேட்டர்கள் மற்றும் பிற மருத்துவ உபகரணங்களை ஏற்கனவே கொள்முதல் செய்யத் தொடங்கிவிட்டோம். மேலும் கூடுதல் குழந்தைகள் சிகிச்சை நிபுணர்களையும் பணியமர்த்திட திட்டமிட்டுள்ளோம்.  அதே போல மருத்துவமனை வளாகத்திலேயே ஆக்ஸிஜன் ஜெனரேட்டர்களை நிறுவிடவும் பணிகளை தொடங்கி உள்ளோம்’’என அவர் தெரிவித்தார்.

click me!