பாஜக - என். ஆர் காங்கிரஸ் இடையே எந்த குழப்பமும் இல்லை.. பாஜக சட்டமன்ற கட்சி தலைவர் நமச்சிவாயம் தகவல்.

Published : Jun 02, 2021, 12:07 PM ISTUpdated : Jun 02, 2021, 12:08 PM IST
பாஜக - என். ஆர் காங்கிரஸ் இடையே எந்த குழப்பமும் இல்லை.. பாஜக சட்டமன்ற கட்சி தலைவர் நமச்சிவாயம் தகவல்.

சுருக்கம்

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் வெளியே வருவதால் மற்றவர்களுக்கும் தொற்று பாதிக்கும் எனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலேயே தனிமைபடுத்தி கொள்ள வேண்டும் என இரு கரம் கூப்பி கேட்டுக் கொள்கிறேன்

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் வெளியே வருவதால் மற்றவர்களுக்கும் தொற்று பாதிக்கும் எனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலேயே தனிமைபடுத்தி கொள்ள வேண்டும் என இரு கரம் கூப்பி கேட்டுக் கொள்கிறேன் என பாஜக சட்டமன்ற கட்சி தலைவர் நமச்சிவாயம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது,  

கொரோனாவின் மூன்றாவது அலை வருவதற்கான சூழ்நிலை இருப்பதால் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தொற்று பாதிக்கப்பட்டவர்கள் கடைசி நேரத்தில் மருத்துவமனைக்கு செல்லாமல், ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். முதலமைச்சர் ரங்கசாமி ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர், எனவை அமைச்சரவை பங்கீடு, ஆட்சி அமைப்பது உள்ளிட்டவைகள் குறித்து நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து பேச்சுவார்த்தை தேதியை சொல்வார்.

அமைச்சரவை பங்கீடு குறித்து முதலமைச்சருடன் பேசி சுமூக முடிவு எடுத்து வெகு விரைவில் முதலமைச்சர் தலைமையில் நல்லாட்சி கொடுப்போம். பாஜக மற்றும் என் ஆர் காங்கிரஸ் இடையே எந்த வித குழப்பமும் இல்லை, சுமுகமாக தீர்வு எட்டப்படும். என பாஜக சட்டமன்ற கட்சி தலைவர் நமச்சிவாயம் கூறினார்.  

 

PREV
click me!

Recommended Stories

எடப்பாடி பழனிசாமி ரொம்ப நேர்மையானவர்.. திமுக அரசே சர்டிபிகேட் கொடுத்துடுச்சு..! ஆர்ப்பரிக்கும் அதிமுக..!
நான் தவிர்த்த நூல் ஒன்று உள்ளது... அது ‘பூணூல்’..! ஐயங்கார் வீட்டில் பிறந்த கமலின் சமத்துவம்