கொங்கு மண்டல வளர்ச்சியை கெடுக்கும் வகையில் கர்நாடக தொழில் அதிபர்களிடம் அண்ணாமலை மாதம் மாதம் பணம் வாங்குவதாக திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் ராஜிவ் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
கோவை கார் வெடி விபத்து
கோவை கார் வெடி விபத்தை தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுக்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறி வருகிறார். குறிப்பாக திமுக அரசின் மெத்தனத்தால் குண்டு வெடிப்பு ஏற்பட்டதாகவும், கோவை தீவிரவாதிகளின் கூடாரமாக மாறிவிட்டதாக தெரிவித்திருந்தார். மேலும் மத்திய உளவு துறை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கைகளையும் திமுக அரசு செயல்படுத்தவில்லையென கூறியிருந்தார். இதே போல அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், அண்ணாமலைக்கும் இடையே வார்த்தை போர் கடுமையாக எழுந்துள்ளது. ஒருவருக்கொருவர் கடினமான வார்த்தைகளை கொண்டு விமர்சித்து வருகின்றனர். கோவை கார் வெடி விபத்து தொடர்பாக தன்னிடம் உள்ள ஆதாரங்களை என்.ஐ.ஏவிடம் கொடுக்க தயார்.
100 கடைகள் ஓகே! ராஜினாமா செய்யுங்க.. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அண்ணாமலை விட்ட சவால் !
மாநில அரசு சம்மன் அனுப்பினால் ஆதாரங்களை கொடுக்கிறேன். ஆதாரங்களை கொடுத்தால் பல உயர் அதிகாரிகளின் பதவி பறிபோக வாய்ப்புள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். இந்தநிலையில் கோவை கார் வெடி விபத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பெரிதுபடுத்துவதாகவும், இந்த சம்பவத்தை அரசியல் செய்வதாகவும் அரசியல் கட்சிகள் குற்றச்சாட்டு எழுந்தது.
முன்னாள் கர்நாடக காவல் அதிகாரி அவர்கள் வதந்திகளைப் பரப்பி கொங்கு மண்டலத்தின்(கோவை) வளர்ச்சிகளை தடுக்கிறார்!!
இதற்காக கர்நாடக தொழில் அதிபர்களிடம் மாதம்,மாதம் பணம் வாங்குகிறாரோ என சந்தேகம் வருகிறது!
இந்தநிலையில் திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் ராஜிவ் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், முன்னாள் கர்நாடக காவல் அதிகாரி அண்ணாமலை அவர்கள் வதந்திகளைப் பரப்பி கொங்கு மண்டலத்தின்(கோவை) வளர்ச்சிகளை தடுக்கிறார்!! இதற்காக கர்நாடக தொழில் அதிபர்களிடம் மாதம்,மாதம் பணம் வாங்குகிறாரோ என சந்தேகம் வருகிறது என அந்த டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்
திமுகவினராக செயல்படும் டிஜிபி..! ஒவ்வொன்றுக்கும் தகுந்த பதில் கொடுக்கப்படும்..! அண்ணாமலை ஆவேசம்