ஜெயா டிவி , நமது எம்.ஜி.ஆருக்கும் ஆப்பு - அடுத்தடுத்து அதிரடி காட்டும் இபிஎஸ் ஒபிஎஸ்...!!!

First Published Aug 28, 2017, 12:16 PM IST
Highlights
The Dinakaran-backed MLAs sent a letter to the governor saying that the Chief Minister Edappadi withdraws support to Palaniasam.


முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் ஆளுநரிடம் கடிதம் அளித்தனர்.

இதனால் அந்த 19 எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செய்யக் கோரி தமிழக அரசின் கொறடா ராஜேந்திரன் சபாநாயகருக்கு பரிந்துரை செய்தார்.

அதன் பேரில், ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏஎக்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ஆனால் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கமுடியாது எனவும் சபாநாயகர் அனுப்பிய நோட்டிஸுக்கு பதில் அளிக்க மாட்டோம் எனவும் தினகரன் தரப்பு கூறி வருகின்றனர்.

இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.பிக்கள்., எம்எல்ஏக்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில்  40   எம் எல்  ஏக்கள்   இந்த கூட்டத்தை   புறக்கணித்துள்ளனர்.

இந்த   கூட்டத்தில்  4 முக்கிய  தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டுள்ளது. அதாவது, சசிகலா  மற்றும் தினகரனை அதிமுகவிலிருந்து   நீக்குவதாக   தீர்மானம்  நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜெயா டிவி , நமது எம் ஜி ஆர்   இரண்டையும்  மீட்டேடுக்கப்படும்  என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சசிகலா  மற்றும் தினகரனால் அறிவிக்கப்பட்ட   நியமனங்கள்  எதுவும் செல்லாது  என்றும்,  சசிகலாவை   நீக்குவதற்காக மிக விரைவில் பொதுக்குழு  கூட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

ஏற்கனவே போயஸ்கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எடப்பாடியின் அறிவிப்பில் சசிகலா கோஷ்டி திணறியிருந்தது. 

click me!