சென்னையில் 44வது புத்த கண்காட்சியை துணை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.. 5 லட்சம் நிதி வழங்குவதாகவும் அறிவிப்பு.

By Ezhilarasan BabuFirst Published Feb 24, 2021, 4:48 PM IST
Highlights

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தினர் நடத்தும் 44வது சென்னை புத்தக கண்காட்சி இன்று துவங்கியது.சென்னை நந்தனம் ஒய்.எம். சி.ஏ வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புத்தக கண்காட்சி இன்று முதல் வரும் மார்ச் 9ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தினர் நடத்தும் 44வது சென்னை புத்தக கண்காட்சி இன்று துவங்கியது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புத்தக கண்காட்சி இன்று முதல் வரும் மார்ச் 9ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. புத்தக கண்காட்சியை துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் துவக்கி வைத்தார். இந்த புத்தக கண்காட்சியில் சுமார் 700 அரங்கங்கள், 800பதிப்பகங்கள், 15லட்சத்திற்கு மேற்பட்ட தலைப்புகள், 1கோடி மதிப்பிலான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. 

  

கடந்த ஆண்டை போலவே 10 லட்சம் வாசகர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்க படுகிறது. காலை 11 மணிக்கு துவங்கி இரவு 8 மணி வரை நடைபெற இருக்கிறது. பதிப்பாளர்கள் புதிய புத்தகங்கள் வெளியிடப்படும், பேச்சு போட்டிகள் இடம் பெறும்.  மார்ச் 8ம் தேதி சர்வதேச பெண்கள் தினம் அன்று பெண் பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள்  வரவழைத்து சிறப்பிக்கபட இருக்கிறார்கள். நுழைவு கட்டணமாக 10ரூபாய் செலுத்த வேண்டும். பள்ளி,கல்லூரி  மாணவர்களுக்கு அவர்களின் அடையாள அட்டையை காண்பித்தல் அனுமதி இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குழந்தைகள் கதை சொல்லும் போட்டி, வினாடி வினா போட்டி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. அப்போது  துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், துணை முதல்வரின் தனி நிதியிலிருந்து சென்னை புத்தக கண்காட்சியை நடத்தும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்திற்கு 5லட்ச ரூபாய் வழங்குவதாக கண்காட்சியை துவக்கி வைத்து பின் அறிவித்தார்.  

click me!