2ஜி வழக்கில் வெளியானது தீர்ப்பு தேதி - தப்புவார்களா ராசா, கனிமொழி...?

First Published Sep 20, 2017, 3:04 PM IST
Highlights
The Delhi High Court Judge OP Saseen ordered the verdict on October 25 in the 2G spectrum allocation case.


2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்த வழக்கில் அக்டோபர் 25 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஒ.பி.சைனி உத்தரவிட்டார். 

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தவர் திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் திகார் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தனர்.

இந்த வழக்கின் விசாரணை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் முடிவுற்ற நிலையில், 2ஜி முறைகேடு வழக்கின் தீர்ப்பு தேதியை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. 

அதாவது வரும் அக்டோபர் 25 ஆம் தேதி அல்லது அடுத்து இரண்டு மூன்று நாட்களில் தீர்ப்பு வழங்கப்படும் எனவும் கூடுதலாக சட்டப்புத்தகங்களை ஆராய்ந்து தீர்ப்பு வழங்க நேரம் தேவைப்படுகிறது எனவும் நீதிபதி சைனி தெரிவித்தார். 

click me!