அமர்நாத் யாத்திரை தேதி பின்னர் அறிவிக்கப்படும். கோவில் கமிட்டி நிர்வாகம் அதிரடி முடிவு.!!

By Thiraviaraj RMFirst Published Apr 22, 2020, 10:44 PM IST
Highlights

அமர்நாத் புனித யாத்திர,கொரோனா தொற்றால் இந்தாண்டு ரத்து செய்ய திட்டமிட்டது கோவில் நிர்வாக கமிட்டி. திட்டிரென அந்த கமிட்டி ரத்துசெய்யப்பட்ட அறிக்கையை திரும்ப பெற்றுள்ளது.

T.Balamurukan

அமர்நாத் புனித யாத்திர,கொரோனா தொற்றால் இந்தாண்டு ரத்து செய்ய திட்டமிட்டது கோவில் நிர்வாக கமிட்டி. திட்டிரென அந்த கமிட்டி ரத்துசெய்யப்பட்ட அறிக்கையை திரும்ப பெற்றுள்ளது.

  வரும் ஜூன் 23-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 3-ம் தேதி வரை நடத்த ஜம்முவில் உள்ள அமர்நாத் கோயில் நிர்வாக கமிட்டி முடிவு செய்திருந்தது. இந்தநிலையில், கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு நடத்தப்படுவதாக இருந்த அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது. 


ஜம்மு காஷ்மீரில் 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.கொரோனா பாதிப்பால் காஷ்மீரில் 77 பகுதிகள் சிவப்பு மண்டலங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அங்கு புனித யாத்திரை செல்பவர்களுக்கு போதிய மருந்துகள், முகாம் வசதிகள் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தி தருவது சாத்தியம் இல்லை என முடிவு எடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அமர்நாத் புனித யாத்திரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டதாக வெளியான அறிவிப்பை அமர்நாத் யாத்திரை நிர்வாகம் தற்போது திரும்ப பெற்றுள்ளது. மேலும் யாத்திரை குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் அறிவித்துள்ளது.
 

click me!