திமுக காங்கிரசின் கலாச்சாரமே பெண்களை இழிவுபடுத்துவதுதான்... எரிமலையாய் வெடித்த பிரதமர் மோடி..!

Published : Mar 30, 2021, 02:42 PM ISTUpdated : Mar 30, 2021, 02:49 PM IST
திமுக காங்கிரசின் கலாச்சாரமே பெண்களை இழிவுபடுத்துவதுதான்... எரிமலையாய் வெடித்த பிரதமர் மோடி..!

சுருக்கம்

தமிழக மக்கள் உங்கள் பேச்சுக்களில் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். மக்கள் அனைவரும் உங்களை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். திமுகவில் இளவரசர் பதவிக்கு வந்த பின்னர் பல மூத்த அரசியல் தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டு உள்ளனர். திமுக பட்டத்து இளவரசருக்கு அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டு உள்ளனர். 

திமுகவும் காங்கிரஸ் ஒருபோதும் பெண்களுடைய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கப் போவதில்லை என பிரதமர் மோடி கூறியுள்ளார். 

கோவை மாவட்டம் தாராபுரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசுகையில்;- ஒருபுறம் தேசிய ஜனநாயக கூட்டணி வளர்ச்சிக்கான திட்டங்கள் முன்வைக்கிறது இன்னொருபுறம் திமுக-காங்கிரஸ் கூட்டணி அவர்களுடைய குடும்ப வாரிசு அரசியல் திட்டத்தை உங்கள் முன்பாக வைத்திருக்கிறார்கள். அந்தக் கட்சியில் கூட்டணியில் உள்ள தலைவர்களுடைய  பேச்சுக்களில் மற்றவர்களை அவமானப்படுத்துவதாக இருக்கிறது. இப்போது காங்கிரஸ் மற்றும் திமுக புதிதாக ஒரு ஏவுகணை தாக்குதலை துவங்கி இருக்கிறது.  2ஜி என்ற அந்த ஏவுகணை பெண்களை இழிவு படுத்துவதற்காக ஏவப்படுகிறது.

உங்கள் தலைவர்களை நீங்கள் கட்டுப்படுத்துங்கள் திமுகவுக்கும் காங்கிரஸ்க்கும் தான் சொல்கிறேன். எங்கள் பெண்களை இழிவு படுத்துகிறார்கள் முதல்வரின் தாயாரை அவர்கள் இழிவாக பேசி இருக்கிறார்கள் ஒருவேளை திமுக ஆட்சிக்கு வந்துவிட்டால் தமிழகத்தினுடைய பெண்கள் நிலைமையை சற்று யோசித்து பாருங்கள். பெண்கள் குறித்து திமுகவின் திண்டுக்கல் லியோனியும் கீழ்த்தரமாக விமர்சித்துள்ளார். ஆனால், திமுக தலைமை அதை தடுக்கவில்லை. 1989ஆம் ஆண்டு திமுக தலைவர்கள் எப்படி ஜெயலலிதாவிடம் நடந்து கொண்டார்கள் என்பதை  தமிழக மறக்கவில்லை. 

தமிழக மக்கள் உங்கள் பேச்சுக்களில் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். மக்கள் அனைவரும் உங்களை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். திமுகவில் இளவரசர் பதவிக்கு வந்த பின்னர் பல மூத்த அரசியல் தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டு உள்ளனர். திமுக பட்டத்து இளவரசருக்கு அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டு உள்ளனர். ஒருவேளை திமுக காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துவிட்டால் பெண்களை  இன்னும்  இழிவு படுத்துவார்கள். திமுக காங்கிரசின் கலாச்சாரமே பெண்களை இழிவுபடுத்துவதாக உள்ளது.

திமுகவும் காங்கிரஸ் ஒருபோதும் பெண்களுடைய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கப் போவதில்லை. அவர்களின் ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. திமுகவை நட்பு கட்சியான மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் சில நாட்களுக்கு முன்பாக வயதான பெண்மணியை  தாக்கி  அவர் உயிரிழந்திருக்கிறார் திமுகவின் கூட்டணி மற்றும் அவர்களின் நட்பு பெண்களுக்கு எதிரானதாகவே இருந்திருக்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

பாஜகவின் வாக்கு திருட்டு அட்டூழியம்..! ஆர்எஸ்எஸின் அத்துமீறல்..! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேச அட்டாக்..!
மொத்தமாகப் பணிந்த எடப்பாடி..! பொதுக்குழுவில் இது மட்டும் நடந்தால் அதிமுகவே ஆட்சி அமைக்கும்..! அடித்துச் சொல்லும் ஆர்.எஸ். மணி..!