
ஒகிபுயலால் பாதிக்கப்பட்ட பயிர்களின் சேத மதிப்பீட்டை கணக்கீடு செய்ய தோட்டக்கலையை சேர்ந்த 90 குழுக்களை அமைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.
முதற்கட்ட ஆய்வில் 3,623 ஹெக்டேர் பரப்பிற்கும் அதிகமாக தோட்டக்கலை பயிர்கள் சேதமடைந்துள்ளதாகவும் அதில், வாழை சுமார் 1,900 ஹெக்டேர் பரப்பிலும் ரப்பர் மரங்கள் சுமார் 1, 400 ஹெக்டேர் பரப்பிலும் சேதம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயலால் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ. 48 ஆயிரத்து 500 முதல் ரூ. 63 ஆயிரத்து 500 நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயலால் பாதிக்கப்பட்ட ரப்பர் மர விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ. 1 லட்சம் நிவாரணம் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கிராம்பு விவசாயிகளுக்கு இடுபொருள் மானிய உதவியுடன் சேர்த்து மொத்தம் ஹெக்டேருக்கு ரூ. 28 ஆயிரம் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.