ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை ரத்து செய்யும் மசோதாவை ஆளுநர் அனுமதி வழங்காதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ள சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், 20 சட்ட மசோதாக்களை முடக்கி வைத்துள்ள ஆளுநரை திரும்ப பெறக் கோரி சிபிஎம் சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
ஆளுநர் -தமிழக அரசு மோதல்
தமிழகத்தில் திமுக அரசுக்கும்- ஆளுநருக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. நீட் மசோதாவி்ற்கு ஒப்புதல் வழங்காததில் தொடங்கிய பிரச்சனை தற்போது வரை முடிவடைந்தபாடில்லை. அரசு விழாக்களில் கலந்து கொள்ளம் ஆளுநர் அரசுக்கு எதிராக கருத்து கூறுவதும், ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை திணிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக புகார் கூறப்பட்டது. கோவை குண்டு வெடிப்பில் தமிழக அரசு மெத்தனமாக செயல்பட்டதாகவும் விமர்சித்து இருந்தார். மேலும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கூட்டத்தை தன்னிச்சையாக நடத்தியது என பல்வேறு பிரச்சனைகளை உருவானது. தற்போது ஆன்லைன் சூதாட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தும் நடவடிக்கைக்கும் அரசு பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
உங்களுக்கு தைரியம் இருக்கா.? திருமாவளவன் & வேல்முருகனுக்கு சவால் விட்ட பாஜக வேலூர் இப்ராஹிம்.!
ஆளுநருக்கு எதிராக போராட்டம்
இந்தநிலையில் ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி மற்றும் தோழமை கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. அந்த வகையில் ஏற்கனவே திராவிட இயக்க தமிழர் பேரவை சார்பாக சுப.வீரபாண்டியன் போராட்டம் நடத்தினார். இதனையடுத்து திராவிடர் கழக கட்சி தலைவர் கி.வீரமணி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது ஆளுநர் ஆன்லைன் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கவில்லையென்றால் ஆளுநர் செல்லுமிடமெல்லாம் கருப்பு கொடி காட்டப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக இந்த மாத இறுதியில் மிகப்பெரிய அளவிலான முற்றுகை போராட்டம் அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
பாஜகவுக்கு பின்னடைவு.. டெல்லி மாநகராட்சியை கைப்பற்றுகிறது ஆம் ஆத்மி கட்சி.! வேற லெவல் வெற்றி தான் !!
களத்தில் குதித்த சிபிஎம்
இந்தநிலையில் கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்த சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ஆன்லைன் சூதாட்டத்தை ரத்து செய்யும் மசோதாவிற்கு ஆளுநர் அனுமதி வழங்காமல் உள்ளார். ஆன்லைன் ரம்மி விளையாட்டு என்ன கால்பந்து போட்டியா, கிரிக்கெட் போட்டியா, விளையாட்டு போட்டியா, ஒரு சூதாட்டத்தை தடை செய்ய அனுமதி வழங்க மாட்டேன் என சொல்வது ஏன்? ஆளுநரிடம், எதை கேட்டாலும் ஆளுநர் மாளிகையில் இருந்து பதில் வருவதில்லை என விமர்சித்தார். இதே போல 20வதுக்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி முடக்கி வைத்திருக்கிறார். இப்படி சட்ட மசோதாக்களை கிடப்பில் போட்டு இருப்பது மாநில மக்களை துரோகம் செய்கிற, வஞ்சிக்கிற, செயலாக உள்ளது. எனவே தமிழக ஆளுநரை திரும்ப பெற வேண்டி வழங்கிய மனுவை வலியுறுத்தி மிகப்பெரிய இயக்கத்தை திரட்டி போராட்டம் நடத்த உள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்தார்.
இதையும் படியுங்கள்
இந்தியாவின் பெருமையை உலகிற்கு பறைசாற்றுவோம்... ஜி20 ஆலோசனை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு!!